சினிமா செய்திகள்

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய தேவரகொண்டா-சமந்தா ஜோடி போடும் ‘குஷி’ படத்தில் இடம் பெற்ற ‘என் ரோஜா நீயா..’

இது ‘குஷி’யான பாட்டு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய தேவரகொண்டா-சமந்தா ஜோடி போடும் ‘குஷி’ படத்தில் இடம் பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார். காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலை ரசித்து படமாக்கி இருக்கிறார். இந்தப் பாடலுக்கு நடனமும் அவர் தான்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் தயாராகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 1-ந் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.