சினிமா செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் வளர்ந்து வரும் ‘ஆதி புருஷ்’ புராணப் படத்தில் சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார்.டிசீரிஸ் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பிரம்மாண்டத்தையும் மகத்துவத்தையும் பொருத்து முன்னோட்ட வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நீடித்தது. இந்த முன்னோட்டம் முதலில் ஹைதராபாத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் உலகளவில் 70 நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இது ஒரு அசலான உலக அளவிலான கொண்டாட்டமாக மாறியிருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் ஆன்மீக உணர்வுகளுக்கு அற்புதமான விருந்தாக அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகள்… வியப்பிலாழ்த்தும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றுவதால்… இந்த பிரம்மாண்டமான படைப்பு பார்வையாளர்களை மாயாஜால மற்றும் புராண உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. பெரிய திரையில் ஓவியம் போல் தோன்றுவதால்.. பார்வையாளர்கள், கண்களை அகல விரித்து, இமைக்க மறந்து ரசிக்கிறார்கள். வசீகரமிக்க கதைக்கு நம்பகத் தன்மையுடன் கூடிய பிரம்மாண்டத்தை இணைத்து இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒரு பொன்னான அத்தியாயத்தை ‘ஆதி புருஷ்’ படைத்திருக்கிறது.
படத்தை டி சீரீஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யுவி கிரியேசன்ஸின் பிரமோத்- வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.