சினிமா செய்திகள்

போண்டாமணி மகள் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்

காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருகிறார், நடிகர் போண்டா மணி. மேலும் இந்த நிலையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

போண்டாமணியின் இந்த நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவரது மகள் சாய் குமாரியின் மேல் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ. படிக்க சீட் கொடுத்துள்ளார்.

இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.