கடந்த 2019-ல் நடிகர்கள் வெற்றி, கருணாகரன் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜீவி.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது.
ஜீவி முதல் பாகத்தில் படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுக்கும் இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கும்.
இதை தெரிந்து கொண்ட நாயகன் அதை தடுக்க முயற்சி செய்வார். அவரால் அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முடிந்ததா? இல்லையா? என்பது முதல் பாகத்தின் கதை.
இரண்டாம் பாகத்தில் நாயகன் வெற்றி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புமிக்க கணவராக வருகிறார். மனைவி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட…அதற்காக கடும் உழைப்பை மேற்கொண்டிருக்கும் வெற்றிக்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாக, அஸ்வினியின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப் போவதாக அவரது தாய் மாமன் மைம் கோபி கூறுகிறார்.
மனைவியின் மருத்துவ செலவுக்கு அந்த வீட்டை வங்கியில் அடகு வைக்கலாம் என்றிருந்தார் வெற்றி. ஆனால் அதற்குள் இப்படி ஒரு சூழல்.

இதனால் மனைவியின் கண் ஆபரேஷனுக்கு புதிதாக அறிமுகமான பணக்காரர் முபாஷிர் வீட்டில் திருட நினைக்கிறார், வெற்றி. நண்பர் கருணாகரனும் இந்த திருட்டில் வெற்றிக்கு உதவ, திருடும் முயற்சி தடையின்றி நடந்தேற, அதேநேரத்தில் அந்த நண்பன் முபாஷீர் கொலையாக…கொலைப்பழி இவர்கள் மேல் விழுந்ததா? வெற்றி தன் மனைவியை காப்பாற்றினாரா? என்பது திகுதிகு கிளைமாக்ஸ்.

தனக்கான கதையை தேர்வு செய்வதில் நாயகன் வெற்றி இம்முறையும் ஜெயித்திருக்கிறார். சோடை போகாத நடிப்பிலும் தன்னை நிலை நிறுத்துகிறார்.

பாத்திரத்துக்கேற்ற பொருத்தமான தேர்வில் அஸ்வினி பிரகாசிக்கிறார்.

காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர பாத்திரத்தையும் தன்னால் தாங்க முடியும் என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார், கருணாகரன்.

பிரவீன் குமார் ஒளிப்பதிவும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும் இந்த வாழ்வியல் கதைக்கு வசந்தம் சேர்க்கிறது.

நடுத்தர வர்க்கத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கண் முன் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடும் இயக்கத்தில் வி.ஜே.கோபிநாத் வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

ஜீவி-2, ஜீவன்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/Untitled-3-1024x512.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/Untitled-3-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்கடந்த 2019-ல் நடிகர்கள் வெற்றி, கருணாகரன் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜீவி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது. ஜீவி முதல் பாகத்தில் படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுக்கும் இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கும். இதை தெரிந்து கொண்ட நாயகன்...