பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணாமல் போகிறாள். அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டி.எஸ்.பி. உதயநிதி ஐ.பி.எஸ். விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன? அவர்களை உதயநிதி கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? கேள்விகளுக்கு திருப்புமுனை தரும் விடையே ‘நெஞ்சுக்கு நீதி.’
போலீஸ் அதிகாரி வேடத்தில் உதயநிதி கச்சிதம். சிறுமிகள் வழக்கை கையில் எடுத்தபிறகு கொஞ்சமும் மிகையில்லாத அவரது நடிப்பு கதைக்குள் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று விடுகிறது.
போராளியாக நடித்திருக்கும் ஆரி, உணர்ச்சிப் புயலாக கடந்து போகிறார். உதயநிதியின் மனைவியாக வரும் தன்யா ரவிச்சந்திரனுக்கு போதிய வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை நிறைவு. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி புது ஸ்டைல் வில்லத்தனத்தில் கவர்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, ‘ராட்சசன்’ சரவணன் பொருத்தமான தங்கள் கேரக்டர் தேர்வை உறுதிப்படுத்துகிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், திபு நினன் தாமஸின் இசையும் படத்தின் இன்னபிற பலங்கள். ஆதிக்க சக்திகளின் பிடரியை பிடித்து உலுக்கும் கதைக்களம் படத்தின் இன்னொரு பலம்.
‘ஆர்டிகள் 15’ என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம் என்றாலும் மறு உருவாக்கம் என்கிற உணர்வே தெரியாமல் இயக்கி இருக்கிறார், அருண்ராஜா காமராஜ்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/nenjukkuneedhi16102021m-1634450568-1653026038.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/nenjukkuneedhi16102021m-1634450568-1653026038-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணாமல் போகிறாள். அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டி.எஸ்.பி. உதயநிதி ஐ.பி.எஸ். விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி என்ன? அவர்களை உதயநிதி கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? கேள்விகளுக்கு திருப்புமுனை தரும் விடையே ‘நெஞ்சுக்கு நீதி.’ போலீஸ் அதிகாரி வேடத்தில் உதயநிதி கச்சிதம். சிறுமிகள் வழக்கை...