சாவீ – திரை விமர்சனம்
நாயகன் உதய் தீப், தனது தந்தை
கொலையுண்டு இறந்ததற்கு தன் இரண்டு மாமன்கள் தான் காரணம் என நினைக்கிறார். அதுவே அவர்கள் மீது கோபமாக அவருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம், இரண்டு மாமன்களில் ஒரு மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார்.
இதற்கிடையே, அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட..
துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் மர்மப் பின்னணிக்கும் காணாமல் போன பிணத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா… பிணத்தை கடத்தியது யார் என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் உதய் தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சுறுசுறுப்பாக வருகிறார். மாமா மகளுடனான காதலில் தீவிரமாக இருந்து கொண்டே மாமாவுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் அந்த கேரக்டரை இயல்பாக செய்து இருக்கிறார்.
மாமன் மகளாக கவிதா சுரேஷ் அழகான இளம் வரவு. நடிப்பிலும் குறை ஒன்றும் இல்லை .
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா, பொறுப்பான போலீஸ் அதிகாரியாக கண்முன் நடமாடு கிறார்.
இசையமைப்பாளர்
கள் சரண் ராகவன்- விஜே ரகுராம் பின்னணி இசை கதைக்களத்தோடு இணைந்து பயணிக்கிறது
ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலத்தின் கேமரா காட்சிகளை இயல்பாக்கி விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், பிணக் கடத்தல் சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒரு போதை பாடமே நடத்தி இருக்கிறார். முடிவு வரை சஸ்பென்ஸ் குறையாமல் படத்தைக் கொண்டு போகும் வித்தையும் இவருக்கு கை வந்து இருக்கிறது.
காணாமல் போன பிணத்தை கடத்திப் போனது யார் என்பது தெரிய வரும் இடத்தில் நாயகனின் மாமா குடும்பத்தின் அதிர்ச்சி ரியாக்சன் நமக்குள்ளும்.
மொத்தத்தில், ‘சாவீ’ போதைக்கு எதிரான ஒரு பாடம்.
