ஹன்சிகா நடிப்பில் புதிய பேண்டசி படம் ஆர்.கண்ணன் இயக்குகிறார்
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் என வித்்தியாசமான கதைக்களங்களை கொண்ட, படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி இருப்பவர், ஆர்.கண்ணன்.
தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்கி முடித்தவர், அதேவேகத்தில் மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசே தான் கடவுளடா’ படத்தையும் இயக்கியுள்ளார்.
இதையடுத்து இன்று குடும்பங்கள் விரும்பி பார்க்கும் சயன்ஸ் பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. இப்படத்திற்காக சென்னை ECR-ல் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.
ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் கையாள, வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மக்கள் தொடர்பு: ஜான்சன்.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார் இயக்குநர் R.கண்ணன்.
படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. பைனான்சியர் மகேந்திரா நிஹார் கேமராவை ஆன் செய்ய படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.