“மெட்ரோ” படப்புகழ் நடிகர் ஷிரிஷ் நடிப்பு திறமையில் மட்டுமல்லாது, அவரது நற்பண்புகளுக்காகவும் பரவலாக பாராட்டை பெற்றவர், ஏனெனில் அவர் தொடர்ந்து பல சமூகம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறார். அவர் இப்போது தமிழ்நாட்டின் இரண்டு சிலம்ப சாம்பியன்கள் நான்சி எஸ்தர், அபிஷேகராஜன் ஆகியோருக்கு சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்துள்ளார்.

 


இதுபற்றி அவர் கூறுகையில், “11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய இந்த திறமையான குழந்தைகளைப் பற்றிய செய்தியை ஒரு பரஸ்பர நண்பர் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும் பார்த்த பிறகு உண்மையில் பிரமித்துப் போனேன். அவர்கள் பல மாவட்ட மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். அவர்களிடம் திறமைகள் இருந்தபோதிலும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது.

இந்தக் குழந்தைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை நான் பார்த்துக்கொள்ள முடிவு செய்தேன். எதிர்காலத்திலும் திறமையான நபர்களை ஊக்குவித்து தொடர்ந்து இதுபோன்ற உதவிகளை செய்வேன்’’ என்று கூறியுள்ளார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/873f6393-56aa-47af-8600-2d4502638447-1024x768.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/873f6393-56aa-47af-8600-2d4502638447-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்“மெட்ரோ” படப்புகழ் நடிகர் ஷிரிஷ் நடிப்பு திறமையில் மட்டுமல்லாது, அவரது நற்பண்புகளுக்காகவும் பரவலாக பாராட்டை பெற்றவர், ஏனெனில் அவர் தொடர்ந்து பல சமூகம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறார். அவர் இப்போது தமிழ்நாட்டின் இரண்டு சிலம்ப சாம்பியன்கள் நான்சி எஸ்தர், அபிஷேகராஜன் ஆகியோருக்கு சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்துள்ளார்.   இதுபற்றி அவர் கூறுகையில், “11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு...