சினி நிகழ்வுகள்

கமல்-ஸ்ரீதேவி நடித்த மூன்றாம்பிறை படத்தின் 40-ம் ஆண்டு கொண்டாட்டம் வாசகர்களுக்கு பரிசு வழங்கும் பாலு மகேந்திரா நூலகம்

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உலகநாயகன் கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982-ல் வெளியான ‘மூன்றாம்பிறை’ தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுள் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19-ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது .இந்த மலரில் படத்தில் இடம் பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம் அதன் பொருட்டு மூன்றம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டும் இக் கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ருபாய். பரிசளிக்கப்படும். மட்டுமல்லாமல் படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்
உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது ஈ மெயில் முகவரி வழி இணையம் வழியிலோ அனுப்பலாம். புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருந்தால் பிரசுரத்துக்கு ஏற்கப்பட மாட்டது. இறுதி தேதி 12–02—2022.

பாலு மகேந்திரா நூலகம், மகாலட்சுமி அடுக்ககம், 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம், சென்னை

\Email: balumahendralibrary@gmail.com

பேச: 9884060274