நகரில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடந்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவனே என்று பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார். இதை போலீஸிடம் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறார்கள் என்பது திரில்லின் உச்சம். இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது. திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக இருப்பதே இந்த ‘கடைசி நொடிகள்.’

கேரளாவில் ‘பாரன்ஸிக்’ எனும் பெயரில் வெளிவந்து ‘சக்க போடு’ போட்ட இந்த படம், தமிழில் கடைசி நொடிகள்’ எனும் பெயரில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழில் படத்தை ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நடிக்க, முக்கிய கேரக்டர்களில் மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா ஜான், மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு -அகில் ஜார்ஜ். இசை – ஜேக்ஸ் பிஜோயி. தமிழில் வசனம்- ஏ.ஆர், கே. ராஜராஜா
தயாரிப்பு-கோபிநாத். இணைத்தயாரிப்பு S.சந்திரசேகர்
கதை திரைக்கதை இயக்கம் -அனஸ்கான் – அகில்பால்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/14b9de7d-ad21-4c3c-ae7e-9e9d16f88da9-1024x678.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/14b9de7d-ad21-4c3c-ae7e-9e9d16f88da9-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்நகரில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடந்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவனே என்று பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார். இதை போலீஸிடம் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை...