ரசிகர்கள் எதிர்பார்ப்பில் நாளை திரைக்கு வரும் ‘அடங்காமை’ திருக்குறள் கருத்தில் உருவான திரைப்படம்

சினிமா செய்திகள்

வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல் திருக்குறள். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற குறள் நகரில் ஒடும் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம் பெற்றிருக்கும். அந்த குறள் பின்னணியில் உருவான கதையே ‘அடங்காமை’ திரைப்படம்.

இந்த குறளுக்கு திரை வடிவம் தந்தவர் இயக்குனர் ஆர்.கோபால். அவர் கூறுகையில், ‘‘இந்த அடங்காமை குறளை ஆழ்ந்து சிந்தித்த நேரத்தில் உருவான கதையே இப்போது அடங்காமை படமாகி இருக்கிறது. படம் ரசிகர்களை கவரும் என்பது நிச்சயம்’’ என்கிறார்.
பொன்.புலேந்திரன், மைக்கேல் ஜான்சன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர்கள் இந்த படத்தைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.
படத்்தில் சரோன்-பிரியா நாயகன் நாயகியாக வர, முக்கிய கேரக்டர்களில் யாகவ் முரளி, காரத்திடிக் கண்ணா, முகிலன் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு P.G. வெற்றி. பாடல் இசை கியூரன் மென்டிசன். திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ். பாடல்கள் ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,
நடனம் சீதாபதி ராம். கபில் ஷாம். ஜெனோசன் ராஜேஸ்வர். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் நாளை ஜனவரி 7 முதல் திரையரங்குகளை கோலாகலமாக்க வருகிறது, அடங்காமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *