திரை விமர்சனம்

பெண்ணின் விலை 999 மட்டுமே பட விமர்சனம்

தனியாக இருக்கும் இளம்பெண்களை குறி வைத்து எப்படியெல்லாம் பாலியல் வியாபாரிகள் நுழைகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துள்ள படம் தான் “பெண் விலை 999 மட்டுமே.’
பெண்கள் குளிக்கும் போது, தனது ஆண் காதலனுடன் வெளியே சுற்றும்போது, அவர்களுக்கு தெரியாமல் ‘ஹிட்டன் கேமரா’ ஒன்றை பொருத்தி அவர்களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுத்து பணம் பார்்த்து வருகிறது ஒரு கும்பல். இந்த வீடியோவை அந்த பெண்களுக்கே அனுப்பி, பணம் பறிக்கிறது அந்த கும்பல். இதனால் மானத்துக்கு அஞ்சி சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ள…

பெண்களை குறிவைத்து வேட்டையாடும் அந்த மர்ம கும்பலை பிடிக்க காவல்துறை முனைய, இந்த கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்.? அவரை மீட்க முடிந்ததா? என்பது மீதிக் கதை.

தொடக்கத்தில் வில்லன், அப்புறமாய் நாயகன் என ராஜ்கமல் இரண்டு நிலைகளிலும் நடிப்புக் கொடியை பறக்க விடுகிறார். கிளைமாக்சில் காதலியை ஏமாற்ற மனதின்றி அவர் தடுமாறும் இடங்களும், காதலிக்கு உண்மை தெரிந்தபிறகு தனது திருந்திய நிலையை விளக்க அவர் போராடும் இடங்களும் நடிப்பில் வேறு லெவல்.

நாயகி ஸ்வேதா பாண்டி, தனது காதலன் உயிருக்கு உயிரான தனது தோழியின் தற்கொலைக்கு காரணமானவன் என்று தெரிந்த பிறகு நடிப்பில் பாயிண்டுகளை ஏற்றி விடுகிறார்.

முதல்பாதியில் பரபரவென காட்சிகளை நகர்த்திய இயக்குனர் வரதராஜ், மறுபாதியில் சென்டிமென்ட் காட்சிகளிலும் பாசாசி இருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் பாலியல் சிந்தனைக்குக் கூட அடிக்கும் சாவு மணி. விவேக் சக்ரவர்த்தியின் பின்னணி இசை ஓகே. சதீஷ்குமார்-கார்வமோகனின் ஒளிப்பதிவு, கொடைக்கானலை இன்னும் அழகாக்கி இருக்கிறது.

காலத்துக்கேற்ற எச்சரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *