சினிமா செய்திகள்திரை விமர்சனம்

இறுதிப் பக்கம் படவிமர்சனம்


ஒரு பெண் நாவலாசிரியர் கொல்லப்படுகிறார். கொலையை துப்பறிய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக பெண் போலீஸ் அதிகாரி கிரிஜா ஹரி வந்து சேர, எப்படி அந்த கொலையை துப்பறிந்தார்கள் என்பது கதை.
அம்ருதாவின் உடலை பிணமாக பார்த்த அவரது நண்பர் ஸ்ரீராஜ் சொல்லும் தகவலில் இருந்து கதை தொடர்ந்து திருப்புமுனைகளை சந்திக்கிறது. அத்தனையும் சுவாரசியத் திருப்பங்கள் என்பது சிறப்பு. அம்ருதாவும் ஸ்ரீ ராஜும் ‘லிவ் இன்’ அடிப்படையில் ‘வாழ்ந்து’ வந்தது தெரிய வர, அடுத்த கட்ட விசாரணையில் அம்ருதாவுக்கு விக்னேஷ் சண்முகம் என்ற ஒரு காதலன் இருப்பதும் தெரிய வருகிறது.
விக்னேஷ் சண்முகம் சொல்லும் அமிர்தாவை பற்றிய உண்மை இன்னும் அதிர்ச்சி ரகம். பல ஆண்களுடன் மட்டுமின்றி ஒரு பெண்ணுடனும் அம்ருதாவுக்கு இருந்த தொடர்பும் இந்த தகவலில் உறுதியாக…. அடுத்த கட்டமும் அதிர்ச்சி தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியான கிரிஜா ஹரியின் மீது கொலைப்பார்வை விழுவது எதிர்பாராத திருப்பம்ணி
எழுத்தாளராக வரும் அம்ருதா அழகில் கவர்வதைப் போலவே, நடிப்பிலும் கவர்கிறார். இருக்கிறார். முன்னணி நடிகைகளே ஏற்கத் தயங்கும் ஒரு வில்லங்க கேரக்டரில் அறிமுகப் படத்திலேயே நடித்த அவரது தைரியம் போற்றதலுக்குரியது.
அவருடன் லிவ் இன் பார்ட்னராக வந்த ஸ்ரீராஜும், காதலனாக வரும் விக்னேஷ் சண்முகமும் பொருத்தமான தேர்வு.
கடைசியில் குற்றவாளி யாரென்று தெரிய வரும்போது அதிர்ச்சி. அதன் தொடர்ச்சியாக வரும் ஆன்ட்டி கிளைமாக்ஸ் கொஞ்சமும் எதிர்பாராதது.
இந்த கேசை துப்பறியும் ராஜேஷ் பாலச்சந்திரனும் கூட அவருக்கே தெரியாமல் இந்த வலைக்குள் இருப்பது, அவர் போலவே நமக்கும் அதிர்ச்சி.
திரைக்கதையில் எழுப்பப்படும் கேள்விகள் அனைத்துக்கும் முடிவில் விடை தெரிய வரும்போது, இதே விடைகள் அதற்கு முன்பு வந்த காட்சிகளிலேயே இருப்பது திரைக்கதை புதுமை. அங்கே ஜெயிக்கிறார், இயக்குனர்.
பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு கச்சிதம். ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் தீப்பிடிக்கும் திரில்லர் அனுபவம்.
தொடக்கம் முதலே எதிர்பார்ப்புடன் கதை சொன்ன இயக்குனர் மனோ வெ. கண்ணதாசனுக்கு தமிழ் சினிமா முதல் படத்திலேயே மகுடம் சூட்டியிருக்கிறது.

இந்த இறுதிப்பக்கம், நம் இதயம் பக்கம்.