ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் ஜோடி போடும் படம் ‘ஓ மணப்பெண்ணே’. தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா-ரித்து வர்மா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை ஏ ஸ்டுடியோஸ் சார்பில் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் ஏ ஹவிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி கப்பா பேசுகையில், ‘‘இயக்குநர் கார்த்தி தன் உயிரை கொடுத்து இந்த படத்தில் உழைத்திருக்கிறார். படத்துக்கான நாயகன்-நாயகி அர்ப்பணிப்பு அபாரமாக இருந்தது. இவர்கள் மாதிரி ஆர்ட்டிஸ்ட் இருந்தால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கவலைப்படத் தேவையில்லை. இது தனி ஒருவரின் உழைப்பு அல்ல. இப்படம் இந்த மொத்த குழுவினராலும் தான் உருவானது. இந்த டீமோடு மீண்டும் வேலை செய்ய ஆசை. ஹரீஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை விரைவில் அறிவிப்போம்’’ என்றார்.

படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “தெலுங்கில் வெளிவந்த ‘பெல்லி சூப்புலு’ படம் பார்த்தபோது இந்த மாதிரி படம் செய்தால் நல்லாயிருக்குமே என நினைத்தேன். பிக்பாஸ் போய் விட்டு வந்த பிறகு இந்தப் பட வாய்ப்பு வந்தது. நடிக்க மனதளவில் தயாரான நேரத்தில் படம் வேறு ஹீரோ கைக்குப்போய் திரும்பவும் என்னிடம் வந்தது. இதில் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது, அதனால் தான் நம்மைத் தேடி வருகிறது என தோன்றியது. இயக்குனரும் நானும் நெடுநாள் நண்பர்கள். முன்பே படம் செய்ய வேண்டும் என பேசியுள்ளோம், இப்போது அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய பாத்திரங்களாக இருக்கும். தற்போது 18 படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர், பிஸியான நேரத்திலும், எங்கள் படத்திற்கு கொடுத்்த தேதியில் வந்து நடித்துக் கொடுத்தார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.
நடிகை பிரியா பவானிசங்கர் பேசுகையில், “ஒரு படத்தை சந்தோஷமாக திருப்தியாக செய்தாலே, அது நல்ல படமாக வந்து விடும். அந்த வகையில் இந்தப் படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். இயக்குனர் கார்த்தியின் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. படத்தில் என் பாத்திரம் நீங்கள் எளிதில் உணரக்கூடிய கேரக்டர். மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும், ஆனால் இந்த படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்த அளவுக்கு என் கேரக்டர் அழுத்தமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுந்தர் பேசுகையில், “’பெல்லி சூப்புலு’ படத்தில் நிறைய உணர்வுபூர்வமான தருணங்கள் இருக்கிறது, அதை கெடுத்து விடாமல், தமிழுக்கு ஏற்ற சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்திருக்கிறோம். ப்ரியா, ஹரீஷ் போன்ற சிறந்த நடிகர்கள் வந்த பிறகு படத்திற்கு பெரும் பலம் வந்து விட்டது” என்றார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், ‘‘இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக்குடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஒவ்வொரு பாடலும் கேட்டவுடனே அவருக்கு பிடித்து விடும். எல்லாப் பாடலுமே சூப்பர் ஹிட்டாகும் என்று தான் இசையமைக்கிறோம், ஆனால் ‘போதை கனவே’ பாடல் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அனிருத் அதை வித்தியாசமாக பாடியிருந்தார். ரசிகர்களுக்கும் பாடல்கள் பிடிக்கும்’‘ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/3-177.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/3-177-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் ஜோடி போடும் படம் ‘ஓ மணப்பெண்ணே’. தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா-ரித்து வர்மா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை ஏ ஸ்டுடியோஸ் சார்பில் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் ஏ ஹவிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில்...