இஸ்லாமிய சிறப்பை சொல்லும் படம். ஐந்து முறை தொழுகையின் அவசியம். மூன்று நாள் தொடர்ந்து சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் நரகம் போவான் என்று நபிகள் சொன்னது. வயதானாலும் கணவன் மனைவி அன்போடு வாழ வேண்டும் என்று நபிகள் வலியுறுத்தியது…

மற்றவர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி ஹஜ்ஜுக்கு போவதால் பலன் ஏதும் இல்லை என்பன போன்ற
விஷயங்களை காட்சிப்படுத்தும் கிளைக்கதைகள் படத்தை தாங்கும் வேர்கள்.
முதிய ஏழைத் தம்பதியின் நேசத்தை சொல்லும் கதையில் தாத்தாவாக விக்ரமாதித்தன் நடிப்பில் பிரமிப்பு காட்டுகிறார்.
இந்து பெண் ஒருவரை இஸ்லாம் வாலிபன் மணந்துகொண்டு சந்தோஷமாக வாழும் கிளைக்கதையில் மோகன், மேனகா யதார்த்த நடிப்பில் சிறப்பு.
மசூதியில் தொண்டு செய்த ஆதரவற்றவர் உடல் அவரது சொந்த ஊரில் கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படுவதும், சகோதரனின் சொத்தை ஏமாற்றி அபகரித்த பணக்காரர் இறந்த பிறகு அவரது உடல் வேனில் எடுத்துச் செல்லும்போது ரெயில்வே கேட் குறுக்கே விழுந்து அவரது இறுதிப்பயணத்தை தடுப்பதுமாக காட்டி சொர்க்கம், நரகத்தின் பாதையை நாசூக்காக புரிய வைக்கும் இடத்தில், இயக்குனர் பக்கிள்பாண்டியன் ‘பக்கா’ பாண்டியன்.
தண்ணீர் பிடிக்கும் இடத்தில் மெல்லிய குழாயில் நாலைந்து குடங்கள் தண்ணீர் நிரம்பும் வரை நீளும் ஷாட் போன்ற சில இடங்கள் மட்டும் வேகத்தடை.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/geetu-insha-allah.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/geetu-insha-allah-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இஸ்லாமிய சிறப்பை சொல்லும் படம். ஐந்து முறை தொழுகையின் அவசியம். மூன்று நாள் தொடர்ந்து சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் நரகம் போவான் என்று நபிகள் சொன்னது. வயதானாலும் கணவன் மனைவி அன்போடு வாழ வேண்டும் என்று நபிகள் வலியுறுத்தியது… மற்றவர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி ஹஜ்ஜுக்கு போவதால் பலன் ஏதும் இல்லை என்பன போன்ற விஷயங்களை காட்சிப்படுத்தும் கிளைக்கதைகள் படத்தை தாங்கும் வேர்கள். முதிய ஏழைத் தம்பதியின் நேசத்தை சொல்லும்...