தமிழ் சினிமாவின் வெற்றி பார்மூலாக்களில் ஒன்று அண்ணன்-தங்கை பாசம். அப்படியொரு பாசமலர்களின் கதையே இந்த படம்.
அண்ணன் சசிகுமார். தங்கை ஜோதிகா. பாசத்தில் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவரில்லை. ஆனால் தங்கை திருமணத்துக்குப் பிறகு இந்த பாச உறவில் விரிசல் விழுகிறது. அதற்கு தங்கையின் கணவரும் ஒரு காரணமாக அமைகிறார்.

பிரிந்த அண்ணன்-தங்கை உறவு சீரானதா? என்பதை கிராமத்து வாழ்க்கை பின்னணியில் இயல்பாக சொல்லியிருக்கிற திரைக்கதை பிளஸ்.

அண்ணனான வரும் சசிகுமார், பாச சென்டிமென்ட்டில் உருகவும் வைக்கிறார். அதிரடி நடிப்பில் காட்சிகளை தெறிக்கவும் வைக்கிறார். தங்கை ஜோதிகா தன் கணவரை பற்றி பேசும் போது பணிவையும், அண்ணனைப் பற்றி பேசும் போது பெருமிதத்தையும் வெளிப்படுத்தி தனது கேரக்டருக்கு கனம் சேர்க்கிறார். திருவிழாவில் தன் கணவரையும் அண்ணனையும் விட்டுக் கொடுக்காது பேசம ்அந்த கேரக்டர் ஜோவுக்கென்றே வார்த்தது போல அப்படியொரு பளபளப்பு.

ஜோதிகாவின் கணவராக வரும் வாத்தியார் சமுத்திரக்கனி, எதையும் சட்டப்படி செய்யும் அந்த கேரக்டரில் தன் இருப்பை வலுவாக பதித்து விடுகிறார்.. அண்ணன்-தங்கை பிரிவதற்கான சூழல் அவர் மூலம் அமையும் இடத்தில் அந்த ஆக்ரோஷமும் ஆதங்கம் கலந்த ஆவேசமும் ‘அப்பப்பா’ ரகம்.

சூரியின் காமெடி காட்சிகள் அத்தனையும் சிரிப்புக்கு உத்தரவாதம். ஜோதிகா வீட்டில் சாப்பிடத் தொடங்கும் நேரத்தில் போலீஸ் தேடி வர..அதற்கு காரணம் சமுத்திரக்கனி என்று உணரும் இடத்தில் சூரியின் அடுத்தடுத்த டயலாக்குக்கு தியேட்டரே வெடித்துச் சிரிக்கிறது.

அந்த ‘நல்ல கெட்டவன்’ கேரக்டரில் கலையரசன் நடிப்பில் ஆழ்கடல் அமைதி. சசிகுமாரின் மனைவியாக சிஜா ரோஸ் பாந்தமான நடிப்பில் மனதில் தேங்கி விடுகிறார். ஆடுகளம் நரேன், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேல.ராமமூர்த்தி, தீபா ஆகியோரும் கேரக்டர்களுக்கு பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்கள்.

இமானின் இசையில் பாடல்கள் சுகராகம். வேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் கவிதை.

அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்திய படங்களில் அவர்களுடைய பிரிவும், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் திரைக்கதையாக இருக்கும். இந்த படத்திலோ பாசத்தை மட்டுமே சொல்லாமல், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் படம் பேசியதில் கூடுதல் கவனம் பெறுகிறார், இயக்கிய சரவணன். ஆடுகளம்-நரேன்-ஜோதிகா சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்ஸ், கூடுதல் ஸ்பெஷல்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/samayam-tamil.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/samayam-tamil-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தமிழ் சினிமாவின் வெற்றி பார்மூலாக்களில் ஒன்று அண்ணன்-தங்கை பாசம். அப்படியொரு பாசமலர்களின் கதையே இந்த படம். அண்ணன் சசிகுமார். தங்கை ஜோதிகா. பாசத்தில் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவரில்லை. ஆனால் தங்கை திருமணத்துக்குப் பிறகு இந்த பாச உறவில் விரிசல் விழுகிறது. அதற்கு தங்கையின் கணவரும் ஒரு காரணமாக அமைகிறார். பிரிந்த அண்ணன்-தங்கை உறவு சீரானதா? என்பதை கிராமத்து வாழ்க்கை பின்னணியில் இயல்பாக சொல்லியிருக்கிற திரைக்கதை பிளஸ். அண்ணனான வரும் சசிகுமார், பாச சென்டிமென்ட்டில்...