‘கால் டாக்ஸி’ சினிமா விமர்சனம்

ஐந்தாறு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் கால் டாக்ஸி டிரைவர்கள் கொலை. அந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணியை வைத்து சினிமாவுக்காக வர்த்தக அம்சங்கள் கலந்து கட்டிய படமாக ‘கால் டாக்ஸி.’

முகத்தில் கொலைகாரக் கலை சுமந்த நான்கு பேர் அடிக்கடி கால் டாக்ஸி புக்கிங் செய்து பயணிக்கிறார்கள். பரபரப்பில்லாத சாலையோரம் காரை நிறுத்தச் சொல்லி, கால் டாக்ஸியின் டிரைவரை கொடூரமாக கொலை செய்து, காரை கடத்துகிறார்கள்.

கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணற, கால் டாக்ஸி டிரைவரான கதாநாயகனின் நண்பர் அந்த கடத்தல்காரர்களால் கொலை செய்யப்படுகிறார். நண்பனைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி போலீஸிடம் போனால் அவர்களின் அலட்சியப் போக்கு நோகடிக்கிறது.

கொந்தளிக்கிற ஹீரோ, நானே கண்டுபிடிக்கிறேன்; பலி தீர்க்கிறேன் என கிளம்புகிறார். அவர் நினைத்தது நடந்ததா? குற்றவாளிகள் யார்? குற்றவாளிகளின் பின்னணி என்ன? கேள்விகளுக்குப் பதிலாக மிச்ச சொச்ச காட்சிகள். இயக்கியிருப்பவர் பா. பாண்டியன்

கதாநாயகன் சந்தோஷ் சரவணன்; நடிப்புக்கு புதுமுகம். அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடிக்க முயற்சித்து அதில் தேறியிருக்கிறார். பாராட்டலாம்!

‘மெர்லின்’, ‘மரகதக் காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’, ‘ஜீவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஸ்வினி இதில் நாயகி. அவரது குடும்பப் பாங்கான தோற்றமும், பாடல் காட்சியில் வெளிப்படும் இளமையும் அழகு!

இயக்குநர் ஈ.ராமதாஸ், கணேஷ்கர், ‘பசங்க’ சிவகுமார், ‘கான மஞ்சரி’ சம்பத்குமார், ‘வழக்கு எண்’ முத்துராமன் பெல்லி முரளி,’போராளி’ திலீபன், சேரன் ராஜ், கார்த்திக் கெளதம், அஞ்சலி தேவி என ஏகப்பட்ட பரிச்சயமான நடிகர் நடிகைகள்… அத்தனைப் பேரும் தங்களின் கதாபாத்திரத்தை கச்சிதமாக தூக்கிச் சுமந்திருக்கிறார்கள்.‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இருந்தும் காமெடி டிராக்கின் நீளம் குறைவு. அதிலும் மனிதர் வழக்கமான முத்திரை பதிக்கிறார்.

வைக்கம் விஜயலெஷ்மியின் கிக்கான குரலில் ‘கிக்கு செம கிக்கு’ பாடலுக்கு தனது வளைவு நெளிவுகளால் அஸ்மிதா சூடேற்றுகிறார்.

பாடல்கள் எழுதி, கேட்பதற்கு இனிமையாக இசையமைத்து, காட்சிகளுக்குப் பொருத்தமாக பின்னணி இசை வழங்கி உழைத்திருக்கிறார் பாணர்.

கதை படு சீரியஸ். என்றாலும் காதலுக்காக ஒன்றிரண்டு காட்சிகள் இருப்பது சற்றே ரிலாக்ஸ்!

எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவில் இரவு நேரத்தில் நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகளை பார்ப்பது பயமூட்டுகிறது.

கால் டாக்ஸி டிரைவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை, அவர்களுக்கு இருக்கிற வலிகளை உணர்த்தும் வசனங்கள் மனதில் பதியும்!

ஏனைய காட்சிகள் சுறுசுறுப்பென்றால் எஸ்.ஆர்.ஹரிமுருகனின் பங்களிப்பில் எட்டிப் பார்க்கும் சண்டைக் காட்சிகள் பரபரப்பு!

இந்த படத்தை பார்த்துவிட்டு கால் டாக்ஸியில் ஏறினால் மனதுக்குள் சற்றே பயம் கவ்வும். அது படத்தின் வெற்றி!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/calltaxi.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/calltaxi-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்‘கால் டாக்ஸி’ சினிமா விமர்சனம் ஐந்தாறு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் கால் டாக்ஸி டிரைவர்கள் கொலை. அந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணியை வைத்து சினிமாவுக்காக வர்த்தக அம்சங்கள் கலந்து கட்டிய படமாக 'கால் டாக்ஸி.' முகத்தில் கொலைகாரக் கலை சுமந்த நான்கு பேர் அடிக்கடி கால் டாக்ஸி புக்கிங் செய்து பயணிக்கிறார்கள். பரபரப்பில்லாத சாலையோரம் காரை நிறுத்தச் சொல்லி, கால் டாக்ஸியின் டிரைவரை கொடூரமாக கொலை செய்து, காரை...