தனது படத்துக்காக பாடல் பாடி அசத்திய நடிகர் நகுல்!
ப்ரிஸ்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடிகர் நகுல் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சதுஷன் இப்படத்தை இயக்குகிறார். அஷ்வத் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். நடிகர் நகுல் ஏற்கனவே இசையில் ஆர்வம் கொண்டவர்.
தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதிற்கு இணங்க அவர், இப்பாடலை பாடியுள்ளார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்
