சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்தில் நடிக்கும் சந்தானத்தின் மகன் நிபுன்

கடந்த 2014 ஆ வருஷம் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவிச்சுது. அடுத்து, ஆர்யாவை வைத்து கடம்பன் படத்தை இயக்கியிருந்தார் ராகவன். தற்போது, தனது மூன்றாவது படமாக பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான், சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறாராராம்.

தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனைச் சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுது. காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *