ஜெயம் ரவி நடிச்சு முடிச்ச 25ஆவது படமான ‘பூமி’ திரைப்படம் இப்போ ரிலீஸாகப் போகுது, அதுலே வரப் போகுது-ன்னு சொல்லி வந்த நிலையில் அந்தப் படத்தோட கதை தன்னுடையது என்று சொல்லி கார்த்திக் கே.பாலாஜி என்ற டைரக்ட்ர யூனியன் பார்ட்டி சர்ச்சையைக் கிளப்பியிருந்த பிரச்னை இப்போ கமுக்கமாகி போச்சாம் .

அதாவது கார்த்திக் கே.பாலாஜி-ங்கர ஆசாமி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இது குறிச்ச புகாரை கொடுத்திருந்தார். சங்க நிர்வாகிகள் தங்கள் வயக்கபடி ‘பூமி’ பட இயக்குநரான லஷ்மணிடம் அவருடைய கதையையும், கார்த்திக் கே.பாலாஜியின் கதையையும் வாங்கி ரெண்டு வாரமா திரும்ப்த் திரும்ப படிச்சுப்புட்டு ‘ஆமாமுங்கோ.. ரெண்டும் ஒன்னு’தான் அப்படீன்னு சொல்லி புட்டாய்ங்க.

இதனால், இந்த விஷயத்தில் ஏதாவது காம்பரமைஸ் செஞ்சே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது தயாரிப்பாளர் தரப்பு.

ரொம்ப யோசச்னைக்கப்புறம் ‘பூமி’ படத்தோட தயாரிப்பாளர் கதை சர்ச்சையைக் கிளப்பிய கார்த்திக் கே.பாலாஜிக்கு 10 லட்சம் ரூபாயை சன்மானமாகக் கொடுத்து பஞ்சாயத்தை முடிச்சுருக்கிறார்.

இது குறிச்சு டைரக்டர் லஷ்மன், “படத்தொட மெயின் நாட்-டன மரபணு மாற்று விதை பற்றி மட்டுமே இரண்டு பேரும் ஒண்ணா திங்க் பண்ணியிருக்கோம். இது மட்டுந்தான் ஒற்றுமை. அவ்வளவுதான். வேறு எதுவுமில்லை. ஆனாலும், இந்தப் பிரச்சினையை முடிச்சாகணுமேன்றதுக்காகத்தான் பணம் கொடுத்துப் புட்டோம். கூடவே யூனியன் சொன்னதால் டைட்டில்ல ‘எங்களைப் போன்று ‘மரபணு மாற்று விதை’ பற்றி சிந்தித்த இணை இயக்குநர் கார்த்திக் கே.பாலாஜிக்கு நன்றி’ன்னுதான் போடப் போறோம்.. வேற என்ன ஸார் செய்றது..?” அப்ப்டீங்கறாராம்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/95e4e2b1-d9b0-4481-958f-534c56632549-1024x606.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/95e4e2b1-d9b0-4481-958f-534c56632549-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்ஜெயம் ரவி நடிச்சு முடிச்ச 25ஆவது படமான ‘பூமி’ திரைப்படம் இப்போ ரிலீஸாகப் போகுது, அதுலே வரப் போகுது-ன்னு சொல்லி வந்த நிலையில் அந்தப் படத்தோட கதை தன்னுடையது என்று சொல்லி கார்த்திக் கே.பாலாஜி என்ற டைரக்ட்ர யூனியன் பார்ட்டி சர்ச்சையைக் கிளப்பியிருந்த பிரச்னை இப்போ கமுக்கமாகி போச்சாம் . அதாவது கார்த்திக் கே.பாலாஜி-ங்கர ஆசாமி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இது குறிச்ச புகாரை கொடுத்திருந்தார். சங்க நிர்வாகிகள்...