சினிமா செய்திகள்

மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறா

மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறா. விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சார்லி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்கி இருக்கார்.

இந்த படம் குறித்து திலீப்குமார் கூறும்போது, “மாறா படத்தை ரீமேக் என சொல்ல முடியாது.. அந்த படத்தின் தழுவல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என முடிவுசெய்த போதே, மாதவனுக்கும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அப்படியே ரீமேக்காக உருவாக்குவதில் உடன்பாடு இல்லை.. இதை ஆரம்பத்திலேயே அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டதால், அந்த படத்தின் முக்கியமான ஒன்லைன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அப்படியே திரைக்கதையை மாற்றி புதிய படமாகவே உருவாக்கியுள்ளோம் அப்படீன்னு சொல்லி இருந்தார்.

தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் தேடிச் செல்லும் காதலும் இசையும் கலந்த அழகான பயணம் தான் இந்தக் கதை.

லாக்டவுனுக்கு முன்பாகவே இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஏதேதோ ரீசனால் தள்ளி போனது ஜனவரி 8, 2021 ரிலீஸ் -ன்னு அஃபீசியலா சொல்லி இருக்காய்ங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *