மன முதிர்ச்சியற்ற, பழமையில் ஊறிப்போன மனிதர்கள் சூழ்ந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் ‘கருப்பங்காட்டு வலசு.’ அந்த ஊரை நாகரிகத்தில் வளர்ந்த கிராமமாக்க பிள்ளையார் சுழி போடுகிறார் நீலிமா இசை. அவரது முயற்சிக்கு ஆதரவு ஒரு பக்கம் முட்டுக்கட்டை மறுபக்கம் என வரிந்துகட்ட, மளமளவென கிராமத்தில் கழிப்பறை வசதியிலிருந்து தெருவுக்குத் தெரு சி.சி.டி.வி. கேமராக்கள் வரை நுழைகிறது. ‘கருப்பங்காட்டு வலசு இப்போ ரொம்பப் புதுசு’ என்கிற ரேஞ்சுக்கு மீடியாக்கள் புகழ்ந்துதள்ளும் ‘முன்மாதிரி’ கிராமமாகிறது.

அந்த நேரமாகப் பார்த்து திடுதிப்பென சிலர் மர்மமாக இறந்துபோக, துவங்குகிறது போலீஸ் விசாரணை. மரணங்கள் ஏன், எதற்கு, எப்படி என்பதை நோக்கி நகரும் திரைக்கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட அவிழ்க்கப்பட அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிறார் இயக்குநர் செல்வேந்திரன்.

ஆர்வம், ஆற்றாமை, பரிதாபம் என முகபாவங்களுக்கு அதிக வேலை வைக்கிற கதாபாத்திரத்தில் நீலிமா இசை. சுற்றிச்சுழலும் கண்களால் உணர்வுகளில் உயிரோட்டம் காட்டி கட்டிப் போடுகிறார்.

ஊர் விழாக்களில் சலங்கை கட்டி ஆடும் நடனக் கலைஞனாக எபினேசர் தேவராஜ். விழிகளை அகல விரித்தால் வில்லன், இதழ்களை திறந்தால் பிறக்கும் புன்னகையில் கிராமத்து ஹீரோ என இயல்பாகவே அமைந்திருக்கிற தோற்றம் கிடைத்திருக்கும் பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.

காவல்துறை அதிகாரியாக வரும் ஜார்ஜ் விஜய் நெல்சனின் அடிதடி விசாரணை சுவாரஸ்யம்.

45 வருடங்களாக தனி ஆளாக ஊரைக் காவல் காத்து வருகிற ‘நொண்டிக் கருப்பன்’ என்ற பாத்திரத்தில் மாரி செல்லதுரை கச்சிதம். சி.சி.டி.வி. கேமரா மீதான அவரது கோபமும், கதையோட்டத்தில் அவர் கொலையாளியாக சரணடைவதும் டர்னிங் பாயிண்ட்!

ஞானகரவேலின் கதைக்கேற்ற பாடல்களுக்கு ஆதித்யா – சூர்யாவின் இசை மிக்ஸிங் பக்கா.

கதையின் பெரும்பகுதி இரவில் நகர, காட்சிகள் அத்தனையும் துல்லியம். ஒளிப்பதிவு ஷ்ரவண் சரவணன்.

எடிட்டரின் கத்தரி இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் கருப்பங்காட்டு வலசுக்கு கூடியிருக்கும் மவுசு!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/kkv-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/kkv-1-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்மன முதிர்ச்சியற்ற, பழமையில் ஊறிப்போன மனிதர்கள் சூழ்ந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் 'கருப்பங்காட்டு வலசு.' அந்த ஊரை நாகரிகத்தில் வளர்ந்த கிராமமாக்க பிள்ளையார் சுழி போடுகிறார் நீலிமா இசை. அவரது முயற்சிக்கு ஆதரவு ஒரு பக்கம் முட்டுக்கட்டை மறுபக்கம் என வரிந்துகட்ட, மளமளவென கிராமத்தில் கழிப்பறை வசதியிலிருந்து தெருவுக்குத் தெரு சி.சி.டி.வி. கேமராக்கள் வரை நுழைகிறது. 'கருப்பங்காட்டு வலசு இப்போ ரொம்பப் புதுசு' என்கிற ரேஞ்சுக்கு மீடியாக்கள்...