இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் சுமன் இயக்கியிருக்கும் படம் ‘பெர்ஃபெக்ட் ராஸ்கல்.’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலும் ரஷ்யாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹிந்தி நடிகர் துஸ்யந்த் சிங் ரவோத் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், படத்தின் டிரெய்லரே படம் சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுப் பாராட்டினார். படம் எடுப்பவர்களுக்கு தன்னுடைய அறிவுரையாக கவர்ச்சி இருக்கலாம், அது தாய்மார்கள் முகம் சுளிக்கிற அளவுக்கு இருக்கக்கூடாது என்றார். மட்டுமல்லாது, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சங்கத்தின் நிதி மொத்தத்தையும் துடைத்தெடுத்தார் என குற்றம்சாட்டி குமுறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரபல சினிமா மக்கள் தொடர்பாளரும், தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் நடிகர் விஜய்யின் முதல் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் மனம் தளரவில்லை. அதனாலேயே பெரிய ஹீரோவாக வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டு, பெர்ஃபெக்ட் ராஸ்கல் படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிற சுமனை ஊக்குவிக்கும் விதமாக பேசினார்.

விரைவில் படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/cd3b90dd-539e-44f4-83dc-8956cdaaed16-1024x678.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/cd3b90dd-539e-44f4-83dc-8956cdaaed16-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் சுமன் இயக்கியிருக்கும் படம் 'பெர்ஃபெக்ட் ராஸ்கல்.' படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலும் ரஷ்யாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹிந்தி நடிகர் துஸ்யந்த் சிங் ரவோத் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், படத்தின் டிரெய்லரே படம் சிறப்பாக இருக்கும் என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுப் பாராட்டினார். படம் எடுப்பவர்களுக்கு தன்னுடைய அறிவுரையாக கவர்ச்சி இருக்கலாம், அது...