‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது . ரெண்டு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

கூடவே தீபாவளி தினமான் இன்னிக்கு ஓடிடி தளத்திலும் நேரடியாக 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘மூக்குத்தி அம்மன்’, ‘பச்சை விளக்கு’ ஆகியவைதான் அந்தத் திரைப்படங்கள். ‘மூக்குத்தி அம்மன்’ ஓடிடியில் வெளியீடு என்பது ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் தற்போது தியேட்டர்களுக்குக் கொண்டு வர முடியவில்லை. ‘மூக்குத்தி அம்மன்’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று காலை 8.30 மணிக்கு வெளியாகிடுச்சு.

‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஏற்கெனவே தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியான திரைப்படம்தான். தற்போது ‘மூவி இன்’ என்னும் ஓடிடி தளத்தில் ‘பே பார் வியூ’ என்னும் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.

இவையிரண்டும் இல்லாமல் நேரடியாக சன் டிவியில் ‘நாங்க ரொம்ப பிஸி’ அப்படீங்கற படம் இன்று காலை வெளியாச்சு. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பில் இந்தக் கொரோனா லாக் டவுன் காலத்திலேயே துவக்கப்பட்டு, முடிக்கப்பட்டு இன்று தீபாவளியை முன்னிட்டு காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டதாக்கும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/rt.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/rt-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது . ரெண்டு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கூடவே தீபாவளி தினமான் இன்னிக்கு ஓடிடி தளத்திலும் நேரடியாக 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன....