சந்தானத்தின் அப்பா சிறிய முதலீட்டில் சொந்தத் தொழிலாக பிஸ்கட் கம்பெனி நடத்தி வருமானம் பார்த்து வருகிறார். தொழிலை விரிவுபடுத்தி அதை தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறிய கம்பெனி பெரிய ஃபேக்டரியாக வளர்ச்சியடைந்தாலும் அதற்கு மகனை அதிபதியாக்கும் ஆசை நிறைவேறாமலே அவர் போய்ச் சேர்ந்துவிட, நிறுவனம் அவரது நண்பர் வசமாகிறது.

காலப்போக்கில் சந்தானம், தன் அப்பாவுக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணியாளாராகமாறவேண்டிய சூழல். அந்த காலகட்டத்தில், அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களிடம் பழகும் சந்தானம், அங்கு புதிதாக வரும் பாட்டியுடன் நெருக்கமாகிறார். அந்த பாட்டிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. அவர் சந்தானத்திடம் கதை சொல்கிறார்.

அந்த கதைப்படி சந்தானத்தின் வாழ்க்கையில் சிலபல சம்பவங்கள் நடக்கிறது… அந்த சம்பவங்களைக் தொகுத்துக் கோர்த்திருக்கிறது ‘பிஸ்கோத்’தின் திரைக்கதை.

ஆடம் சான்ட்லரின் பெட்டைம் ஸ்டோரிஸ் படத்தை தழுவி இயக்கியிருக்கிறார் ஆர். கண்ணன்.

பார்த்ததும் கெக்கேபிக்கே சிரிப்புவரும்படி மூன்று, நான்கு கெட்டப்களில் வருகிற சந்தானம் வழக்கமான சலம்பல் வசனங்களை பக்கம் பக்கமாக வைத்துக் கொண்டு, மொட்டை ராஜேந்திரன் – லொள்ளுசபா’ மனோகரை துணைக்குச் சேர்த்துக் கொண்டு கலகலப்பூட்டுகிறார்.

தாரா அலிஷா பெர்ரி (‘ஏ 1’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வந்தவர்), ஸ்வேதா முப்பழா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். பெர்ரி ஒருசில காட்சிகளில் அட்டனன்ஸ் போட்டு தன் சிறிய கண்களைச் சிமிட்டுவதோடு சரி. முப்பழா குட்டிக் குட்டிக் கவுனில் வந்து கவனிக்க வைக்கிற இளமைப் பலா!

சந்தானத்துக்கு கதை சொல்லும் பாட்டியாக பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி. இது அவருக்கு 400-வது படமாம். முகபாவத்தால் மட்டும் நடித்திருக்கிறார்.

சந்தானத்தின் அப்பாவாக ‘ஆடுகளம்’ நரேன், ரசிக்கும்படி நடிக்கும் ஆனந்தராஜ், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்… அத்தனை கதாபாத்திரங்களும் கதையோட்டம் இழுத்த இழுப்புக்கு இசைந்திருக்கிறார்கள்.

இதமான பாடலுக்காகவும்,பொருத்தமான பின்னணி இசைக்காகவும் உழைத்திருக்கிறார் ரதன்.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவுக்கு ஒரு பாராட்டுப் பூங்கொத்து.

பிஸ்கோத் – சிரிப்பு விரும்பிகளின் திருப்திக்கு மினிமம் கேரண்டி!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/pi-1024x651.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/pi-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்சந்தானத்தின் அப்பா சிறிய முதலீட்டில் சொந்தத் தொழிலாக பிஸ்கட் கம்பெனி நடத்தி வருமானம் பார்த்து வருகிறார். தொழிலை விரிவுபடுத்தி அதை தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறிய கம்பெனி பெரிய ஃபேக்டரியாக வளர்ச்சியடைந்தாலும் அதற்கு மகனை அதிபதியாக்கும் ஆசை நிறைவேறாமலே அவர் போய்ச் சேர்ந்துவிட, நிறுவனம் அவரது நண்பர் வசமாகிறது. காலப்போக்கில் சந்தானம், தன் அப்பாவுக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணியாளாராகமாறவேண்டிய சூழல். அந்த காலகட்டத்தில், அருகிலிருக்கும்...