கொலைக் ‘கஞ்சா’ த ஒரு இளைஞனை துப்பறிந்து துரத்திப் பிடிக்கிறது போலீஸ். விசாரித்தால், அவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தீரா வியாதிக்காரனாகி, சைக்கோவாகி, தன் வியாதியை மற்றவர்களுக்கு பரப்புவதில் சுகம் காண்பவனாகி, பல உயிர்களுக்கு எமனாகி… ஏன்? எப்படி? எதனால்?

விரிகிறது பிளாஷ்பேக். குற்றவாளிகள் அவர்களது செயலுக்கு ஒரு நியாயமான காரணம் வைத்திருப்பதைப் போலவே அவனும் வைத்திருக்கிறான். அவனை சட்டம் என்ன செய்தது என்பதே ‘மரிஜூவானா’வின் கதைக்களம். ரத்தச் சகதி, ஆபாச வசனங்கள், கவர்ச்சிக் காட்சிகள் என சுற்றிச் சுழல்கிறது திரைக்கதை. இயக்கம்: எம்.டி.ஆனந்த்
கரும்பாய் உயரம், இரும்பாய் உடற்கட்டு என ஹீரோ ரிஷி ரித்விக் காவல்துறை உயரதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்துகிறார். ஹீரோயினை கசக்கிப் பிழிந்து, உதட்டைக் கடித்து படம் பார்ப்போருக்கு காமப் பசியைத் தூண்டுகிறார்.
லேசா பார்த்தாலே போதையேற்றும் வாளிப்பான தேகத்துக்கு சொந்தக்காரராய் ஹீரோயின் ஆஷா பார்த்தலோம். அவரும் போலீஸாகவே வருகிறார். பாடல் காட்சியில் ஏராளமாய் காட்டுகிறார் தாராளம்!
வில்லனாக வருகிற தம்பியின் நடிப்பில் செயற்கைத் தனம் எட்டிப் பார்த்தாலும் திரைக்கதையோட்டம் அதை சமாளிக்கிறது.
அப்படி வந்து இப்படி போகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். வழக்கம்போல் டெம்ப்ளேட் காமெடி. மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வில் குறையில்லை.
டைரக்டரிடம் ஒரு கேள்வி, காலேஜ் ஹாஸ்டலை அத்தனை மோசமாக காட்டியிருக்க வேண்டுமா?
ஒரு ஷோக்குப் பாட்டு, ஒரு சோகப் பாட்டு என கம்போஸிங்கில் வெரைட்டி காட்டியிருக்கிறது கார்த்திக் குருவின் கீ போர்டு!
‘ஒளிப்பதிவு சபாஷ் யா’ என்று சொல்லவைக்கிறார் பாலா ரோஸய்யா.
இளைஞர்கள் கெட்டுச் சீரழிவதற்கு காரணம் என்ன என்பதை அலச முற்பட்டதற்காக ‘மரி ஜூவானா’வுக்கு தரத்தான் வேண்டும் மரியாதை!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/mar-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/mar-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்திரைப்படங்கள்கொலைக் 'கஞ்சா' த ஒரு இளைஞனை துப்பறிந்து துரத்திப் பிடிக்கிறது போலீஸ். விசாரித்தால், அவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தீரா வியாதிக்காரனாகி, சைக்கோவாகி, தன் வியாதியை மற்றவர்களுக்கு பரப்புவதில் சுகம் காண்பவனாகி, பல உயிர்களுக்கு எமனாகி... ஏன்? எப்படி? எதனால்? விரிகிறது பிளாஷ்பேக். குற்றவாளிகள் அவர்களது செயலுக்கு ஒரு நியாயமான காரணம் வைத்திருப்பதைப் போலவே அவனும் வைத்திருக்கிறான். அவனை சட்டம் என்ன செய்தது என்பதே 'மரிஜூவானா'வின் கதைக்களம். ரத்தச் சகதி,...