படத்திற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல – அஜித் ரசிகர்கள்

தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் வலிமை ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில். அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. ஃபிட்டாக இருக்கும் அஜித்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வலிமை அப்டேட்டுக்காக ஏங்கி கிடக்கும் அஜித் ரசிகர்களுக்கு அவரது புகைப்படம் ஆறுதல் அளித்துள்ளது.
அஜித்தின் இடதுகையில் தெரியும் மிகப்பெரிய தழும்பு வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் உண்டானது என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டு வரும் ரசிகர்கள் ‘படத்திற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல’ என குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கிடையே #Valimai என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருது.
