சூர்யா வெளியிட்ட இசை வீடியோ

GV.பிரகாஷ் உடன் இணைந்து சூப்பர்ஸ்டார் சூர்யா அமேசான் ஒரிஜினல் திரைப்படம் புத்தம் புது காலையின் இசை வீடியோவை வெளியிட்டுள்ளார்
இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டைத் தொடர்ந்து, அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை-ன் 5-பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
புத்தம் புது காலை-ன் டை்டில் சவுண்ட்டிராக்கிற்கு, பிரபல இசை அமைப்பாளர் GV. பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் இது காதல், புதிய தொடக்கங்கள் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது
புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது
சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ரூ.129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.
மும்பை, இந்தியா, அக்டோபர் 8, 2020 – அமேசான் பிரைம் வீடியோ இன்று வரவிருக்கும் அமேசான் ஒரிஜினல் தமிழ் திரைப்படமான புத்தம் புது காலை-ன், மனதை வருடும் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இது, ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும். ஆல்பம் வெளியீட்டைச் சிறப்பிக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் சூர்யா, டைட்டில் பாடலின் இசை வீடியோவை வெளியிட்டார். இதற்கு பிரபலமாக, விருதுகள் பல வென்ற இசையமைப்பாளர் GV. பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்புதிய, இனிமையான ஆல்பத்தில் பல்வேறு மனநிலைகளுக்கான 5 அதிசிறந்த பாடல்கள் அடங்கியுள்ளன. அவை, புதிய தொடக்கங்கள், காதல், இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை ஒளிக்கீற்று ஆகிய கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
புத்தம் புது காலையில் 5 தனிப்பட்ட கதைகள் கூறப்பட்டாலும், தலைப்பு பாடல் அனைத்து தனித்துவமான கதைகளுக்கும் ஏற்றவாறும் மற்றும் ஒட்டுமொத்த கருத்தாக்கமாக புதிய தொடக்கங்களை மையமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் அதன் சொந்த, தனித்துவமான இசை பாணி இருந்தாலும், படம் வழங்க முயற்சிக்கும் ஒட்டுமொத்த செய்தியை தலைப்பு பாடல் முன்னிலைப்படுத்தும்.
மாறுபட்ட கதைக்களம் மற்றும் நடையுடன், சுஹாசினி மணி ரத்னம் (Coffee, Anyone?), சுதா கொங்கரா (Ilamai Idho Idho), கௌதம் வாசுதேவ் மேனன் (Avarum Naanum/Avalum Naanum), ராஜீவ் மேனன் (Reunion) மற்றும் கார்த்திக் சுப்புராஜ் (Miracle) உள்ளிட்ட தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த 5 பிரபல இயக்குனர்களின் ஒருங்கிணைந்த படைப்பே இந்த ஆன்தாலஜி திரைப்படமாகும்.
