சினிமா செய்திகள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் வேண்டுகோள்

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய வேலூர் SITI GOLD TV யின் மீது பிழை பட தயாரிப்பாளர் திரு. R. தாமோதரன் அவர்கள் புகார் அளித்ததன் பேரில் 18/08/2020 மாலை 6மணிக்கு ” பிழை ” திரைப்படம் ஒளிபரப்பிய SITI GOLD TV channel மீது வேலூர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு, உயர் திரு காவல் ஆணையர் திருமதி. R. அம்பிகா அவர்கள் தலைமையில் ரெய்டு செய்யப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. பறிமுதல் செய்த கம்ப்யூட்டரில் ” பிழை ” திரைப்படம் ஒளிபரப்பிய ஆதாரம் உள்ளது. மேலும் இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் தர்பார், பட்டாசு போன்ற 2020ல் திரைக்கு வந்த புதிய திரைப்படங்கள் YUPP TV Application மூலம் download செய்து ஒளிபரப்பியது தெரியவந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு உயர் திரு. SP, DSP அவர்கள் மற்றும் வேலூர் காவல் துறைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி வரும் Local cable TV ஆபரேட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நலிந்து வரும் திரைப்பட தயாரிப்பாளர்களை காப்பாற்றி உரிய நஷ்ட ஈடு பெற்று தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயாரிப்பாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து இது போன்ற புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி வரும் Local cable Tv மீது குண்டர் சட்டம் போன்ற கடினமான தண்டனை விதித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
ரா. தாமோதரன்
” பிழை ” திரைப்பட தயாரிப்பாளர்.
+91 98843 05113

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *