USCT வழங்கும் “டுகெதர் அஸ் ஒன்” (Together As One)
சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கும் ஒரு புதிய முயற்சி 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ. ஆர். ரகுமான் அவர்களின் சூப்பர் ஹிட் பாடல் “தமிழா தமிழா!”
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் திரு. ஶ்ரீநிவாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் திரு.உன்னிக்ருஷ்ணன் , திருமதி. சுஜாதா மோகன் , திரு. ராகுல் நம்பியார், திரு. ரஞ்சித் கோவிந்த் அவர்கள் அறங்காவலர்களாக பொறுபேர்கிறார்கள். இந்த ‘பான்டமிக்’ சமயத்தில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம்.
எங்கள் அமைப்பின் முதல் முயற்சி “டுகெதர் அஸ் ஒன்” திரு. ஏ.ஆர்.ரகுமான் திரு.மோகன்லால் ,
மற்றும் திரு யஷ் அவர்கள் ஆகஸ்ட் 15 -ஆம் நாள், காலை 11:00 மணியளவில் 2020 சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறார்கள். இதை தொடர்ந்து அமைப்பின் நோக்கத்திற்காக மக்களிடையே நிதி உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பேரிடர் நேரங்களில் ஒற்றுமையை குறிக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் 28 வருடங்களுக்கு முன்பு திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையில் வெளிவந்த ஒரு பிரபலமான பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்தபடியே ஐந்து மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி) ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் .
USCT செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது.
எங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் , முயற்சிகளுக்கும் நீடித்த ஆதரவளித்து உறுதுனையாக நிற்கும் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு நீங்கள் தரப்போகும் பேராதரவை என்றென்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.
“டுகெதர் அஸ் ஒன்” பாடல் ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு அவர்களால் வடிவமைக்கப்பட்டு வீடியோ LitBox Media Factory – ஆல் தொகுக்கப்பட்டுள்ளது.
Ishit Kuberkar இந்த பாடலை mixing and Mastering செய்திருக்கிறார் மற்றும் பாடல் வெளியீட்டை ஒருங்கினணத்து தருவது Silver Tree Talent Management, Chennai. Silver Tree கம்பெனி பிரசித்தி பெற்ற கலைஞர்களை மற்றும் திறமை வாய்ந்தவர்களை உலக அளவில் முக்கிய நிகழ்வுகளில் இனணத்திருக்கிறார்கள்.