திங்க் மியூசிக் இந்தியாவின் புதிய முயற்சி “திங்க் தமிழ்”
“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”. இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய் இருக்கும். பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் மற்றும் எழுத்துக்களை புதுமையான முறையில் “திங்க் தமிழ்” வெளியிடும்.
“திங்க் மியூசிக் இந்தியா” தொடங்கும் திங்க் தமிழின் முதல் இசை கலைஞராக பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான ஷபிர் பங்கேற்கயிருகிரார். “சகா” , “தில்லுக்கு துட்டு 2” போன்ற படங்களின் வெற்றிக்கு ஷபிருடைய இசை பெரிதளவில் பங்களிதுள்ளது . “சகா” திரைபடத்தில் உள்ள “யாயும்” என்ற பாடல் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறது.
பாரதியாரின் முக்கிய கவிதையான “தேடிச்சோறு” படைப்பை சிங்கப்பூரிலுள்ள புகழ் பெற்ற “தெங் இசை குழுமத்தோடு” சேர்ந்து இந்த இசை வெளியீட்டின் முதல் படைப்பாக தர இருக்கிறார் ஷபிர். இதற்கு இசையமைத்து பாட போவதும் ஷபிர்தான். தற்போதைய சவாலான காலகட்டத்தில், இந்த இசை வெளியீடு ஒவ்வொருவரின் செவிக்கும் விருந்தாக அமைவதோடு, எழுச்சியூட்ட கூடியதாகவும், நம்பிக்கை விதைப்பதாகவும் அமையும்.