சிம்புவின் குரலில் SUPERSTAR ANTHEM

ஜான் பால்ராஜ் & ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப்.இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.அர்ஜூன் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர்.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ஆன்தம் (Superstar Anthem) என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த சூப்பர் ஸ்டார் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.. நடிகர் ராகவா லாரன்ஸ் பாடலை வெளியிட்டார்.ரஜினி ரசிகர்களுக்காகவே இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது எனலாம்.இந்த பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
