சினி நிகழ்வுகள்

டிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) !

“ஆஹா” தளம் துவங்கப்பட்ட காலாண்டு காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

100 சதவீத தெலுங்கு செண்டிமெண்ட் உத்ரவாதம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

ஆஹா ப்ளேயர் தெலுங்கு பொழுதுபோக்கு உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி மிகப்பெரிய வெற்றி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

ஆஹா (aha)தளம் தெலுங்கு பொழுதுபோக்கு உலகில் கடந்த பிப்ரவியில் கால்பதித்தது. கால்பதித்த மூன்றே மாதங்களில் ரசிகர்களின் பேராதரவில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. மிககுறுகிய காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பொழுதுபோக்கு நிறுவனமாக ஆஹா (aha) எண்டர்டெயின்மெண்ட் வளர்ந்திருக்கிறது. ப்ரத்யேகமாக தெலுங்குகென்றே உருவாகியுள்ள இந்த “ஆஹா” (aha) தளம் உலகம் முழுதும் பரவியிருக்கும் 10 கோடி தெலுங்கு மக்களிடையே தவிர்க்கமுடியாத பெயரைப் பெற்றிருக்கிறது.

இத்துறையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் எவரும் சாதித்திராத இடத்தை வெகு வேகமாக அடைந்திருக்கிறது. ஆஹா (aha) எண்டர்டெயின்மெண்ட். பொழுதுபோக்கு உலகில் புதுமையை புகுத்தி, புரட்சி ஏற்படுத்தி, ரசிகர்களின் பேராதரவுடன் முதல் இடத்தை அடைந்திருக்கிறது. டிஜிட்டல் திரை உலகில் அதிவேக வளர்ச்சியை பெற்று வரும் நேரத்தில், இணைய ரசிகர்களுக்காக உயர்தரத்தில் நேரடி தெலுங்கு கதைகளை உருவாக்கி வருகிறது. 40 திரைத்தொடர்களை, பிரபல நடிகர்கள் மற்றும் பெரும் இயக்குநர்கள் இயக்கத்தில் அளித்து வருவதுடன் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களை வாங்கும் வேலையிலும் மும்முரமாக இயங்கி வருகிறது. இந்த வகையில் முதலாவதாக நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள “லவ் ஸ்டோரி” படத்தை வாங்கியுள்ளது. மேலும் பல படங்களை வாங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகில் பெரிய இடத்தை பெற்றிருக்கும் ஆஹா (aha) குறித்து அதன் நிறுவன பங்குதாரர் மற்றும் தலைமை அதிகாரி திரு கிரிஷ் மேனன் கூறியதாவது…

இந்தியாவில் ஓடிடி எனும் டிஜிட்டல் திரை சந்தை புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதிலும் மொழிவாரியான விகிதத்தில் இத்துறைக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. தெலுங்கு டிஜிட்டல் உலகம் தற்போது மிகப்பெரும் சந்தைக்களமாக இருக்கிறது. இணையம் மிகப்பரவலாக இருக்கும் இன்றைய தேதியில் உலகம் முழுக்க இருக்கும் 10 கோடி தெலுங்கு பேசும் மக்களிடையே, அவர்கள் மொழியில் சொல்லும் நேரடி, தொடர்களுக்கு, கதைகளுக்கு பெரும் தட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் தெலுங்கு திரைப்படங்களை, தொடர்களை காண்பதில் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனை தயாரித்து அளிக்கும் நிறுவனமே சந்தையில் கோலோச்சும். அந்த வகையில் அவர்களை “ஆஹா” (aha) நிறுவனம் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ப்ரத்யேகாமாக தெலுங்கு கதைகளை தேடும் ரசிகர்களுக்கு “ஆஹா” (aha) ஒரு முக்கிய தளமாக இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் அனைத்தும், அவர்கள் நுகரக்கூடிய குறைந்த விலையில் ஆஹாவில் கிடைக்கிறது. அந்த வகையில் ஓடிடி தளத்தில் மிகப்பெரும் புரட்சியை “ஆஹா” (aha) ஏற்படுத்தியிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *