எப்போதும் சர்ச்சையை இழுத்துப் பிடித்து உம்மா கொடுத்து கொண்டே இருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா..
உலகின் முதல் கொரோனா குறித்த திரைப்படமாக ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தையும் இந்த லாக்டவுனுக்கு இடையில் இயக்கி, அதன் சுவாரஸ்யமான ட்ரைலரையும் சமீபத்தில் வெளியிட்டார். அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் ‘Naked Nanga Nagnam’ என்று பெயர் வைத்துள்ள தனது அடுத்த படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டார்.
இந்நிலையில், இன்னிக்கு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை அவர் அறிவிச்சிருக்கார். ‘தி மேன் ஹூ கில்டு காந்தி’ மற்றும் ‘கிட்னாப்பிங் ஆஃப் கத்ரீனா கைஃப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த அவர் “எனது தனிப்பட்ட தளத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, CLIMAX ஐ எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கமாகக் கருதுகிறேன்.. காத்திருங்கள் மற்றும் நான் எந்த வகையான PATHBREAKING உள்ளடக்கத்தை RgvWorldTheatre-ல் தொடர்ந்து வைத்திருப்பேன் என்று, பாருங்கள்” அப்படீன்னு சொல்லி இருக்கார். கூடவே மேலும் “தியேட்டர்களை மறந்துடுங்கள், சினிமாவின் எதிர்காலம் OTT இல் கூட இல்லை, ஆனால் அது தனிப்பட்ட பயன்பாடுகளில் மட்டுமே இருக்கும்” -முன்னும் சொல்லி இருக்கார்