சினிமா செய்திகள்நடிகர்கள்

ஆளும் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கை…

நேற்று முதல் மக்களின் துயரங்களை மதிக்காமல், டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து விட்டது.

இதை கருத்தில் கொண்டு
டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இன்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு இன்று மதியம் வீடியோ விசாரணைக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அடங்கிய சிறப்பு அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு சார்பில் உதவி அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டே வழக்காட வந்திருந்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் A.R.L. சுந்தரேசன் அவர்கள் ஆஜராகி இருந்தார். அது ஒரு அதிர்வலையை உண்டு பண்ணியது. பிற வழக்கறிஞர்கள் அட்வொகேட் ஜெனரல் உட்பட சட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை கேட்பது ARL சுந்தரேசன் அவர்களிடம் தான். அவரே மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்து மக்கள் நலம் சார்ந்த இந்த வழக்கில் ஆஜரானது அரசு தரப்புக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

மக்கள் நலனுக்காக, எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டிய செயல்பாடுகளை முன்னெடுத்து, தமிழக மக்களின் குறிப்பாக தமிழக பெண்களின் மனசாட்சியாக மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.