சினி நிகழ்வுகள்

தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் செய்த உதவி

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மகளிர் அணி தலைவி திருமதி தேவி அவர்கள் கடந்த 23.04.2020 அன்று சென்னையிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மகள் திருமணம் முடிந்த கையோடு தரிசனத்திற்கு வந்திருந்தனர்,

திடீரென கடந்த 25.03.2020 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்களுடன் வந்த 3 சிறுவர்கள் 5 மகளிர் உட்பட 11 பேர் கடந்த 40 நாட்களாக திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வந்தனர் , தகவல் அறிந்த மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி சிவப்பிரகாசம் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா அவர்களை போனில் தொடர்பு கொண்டு விவரம் சொல்ல …. உடனே அவர் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் அவர்களிடம் நிலைமை எடுத்து ச்சொல்லி இருக்கிறார

இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் பில்லா ஜெகன் அவர்கள் சம்பந்தப்பட்ட வர்களை நேரில் சந்தித்து விட்டு பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு புது மணத் தம்பதிகள் குடும்பத்தோடு படும் அவஸ்தை யை எடுத்து சொல்லி …..11 பேரும் சென்னை செல்ல சிறப்பு அனுமதி வாங்கி கொடுத்து, அவர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் மதியம் மற்றும் இரவு உணவும் வழங்கி சிறப்பு பஸ் ஏற்பாடு செய்து அதற்கான செலவையும் அவரே ஏற்று அவர்களுக்கு பண உதவியும் செய்து திருமண தம்பதிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். அனைவரும் மகிழ்ச்சியாக… 40 நாட்களின் தவிப்புக்கு பிறகு தங்கள் சொந்த ஊர்ரான சென்னைக்கு நேற்று இரவு நலமுடன் திரும்பினர்கள்

என்றும் தளபதியின் மக்கள் இயக்க பணியில்
தொடர்ந்து பணியாற்றி வரும்
S.J.பில்லா ஜெகன் அவர்களுக்கும்… திருச்சி ராஜா அவர்களுக்கும்… மணமக்களும் உறவினர்களும் மனமார்ந்த நன்றியை கூறினார்கள்