த்ரிஷா- வயசு 37
இந்த சினிமாவில் எத்தனையோ விநோதங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.. அதிலும் நாற்ப்து ஆண்டுகளாக ஒருவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் இதே தமிழ் திரையுலகில் பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா=வும் இங்கேதான் உண்டு.. அந்த த்ரிஷாவின் பர்த் டே-யான இன்னிய தினத்தை ட்ரெண்டிங் ஆக்கும் ரசிக கூட்டமும் இங்கேதான் உண்டு. இத்தனை ஆண்டுகளில் அவர் ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து அவரின் திரைப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிக.ளை முறியடித்து தனித்த தன்னம்பிக்கையாலும் தளராத உழைப்பாலும் தொடந்து நடை போட்டு கொண்டே வருகிறார். அந்த வகையில் நடிகைகளையும் தாண்டி ஏகப்பட்ட பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
முன்னரே சொன்னது போல் இந்த தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அண்ணி, அக்கா, குடும்பத் தலைவி வேடங்களுக்கு மாறிவிட வேண்டிய சூழலில் இன்றும் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகைகளைப் பாவித்த விதத்தை மாற்றி அமைத்தது த்ரிஷாவின் சாதனைதான்
சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் சிறந்த நடிகை. தனது பெற்றோருக்கு ஒரே மகளான த்ரிஷா,1983-ஆம் வருசம் இதே மே மாதம் 3-ஆம் தேதி பிறந்தார்.சென்னையில் மவுண்ட் ரோடில் உள்ள சர்ச்பார்க் பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்த த்ரிஷா.சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் பி.பி,ஏ பட்டப்படிப்பை முடிச்சார்.
படங்கள் நடிப்பதற்கு முன்பே மாடலிங்-யில் பிசியாக இருந்த த்ரிஷா,மிஸ் மெட்ராஸ்,மிஸ் சேலம் என நிறைய பட்டங்களை பெற்றுள்ளார்.மாடலிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் சினிமாவிற்கு வரமாட்டேன் என த்ரிஷா சூடம் அணைத்து சத்தியமெல்லாம் செய்தாராம்.
ஆனால் 1999-ஆம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைபடத்தில்,சிம்ரனின் தோழியாக த்ரிஷா தோன்றி இருப்பார் இதுவே அவரின் முதல் திரை தோற்றம் ஆகும். இதை அடுத்து 2002 ,ல் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே”திரைப்படத்தில் நடித்தார்.ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே.
அந்த மொத படத்துலேயே தமிழ்திரையுலகின் உள்ளம் கவர் கன்னிகளில் ஒருவரா மாறிய த்ரிஷா கில்லி,சாமி,உனக்கு இருபது என்க்கு பதினெட்டு என மசால படங்களுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா,அபியும் நானும்,கொடி என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிச்சா
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள அம்புட்டு ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்த்தவர் த்ரிஷா தான்.உலக நாயகன்,தளபதி,தல என அனைவருடனும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடி சேர்ந்த த்ரிஷா இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த-உடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்களுக்கு நிகராக தெலுங்கு படங்களில் நடித்து வந்த த்ரிஷா ஹிந்தியிலும் தன் காலை பதித்தார்.தமிழில் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் “ப்ரிய தர்ஷன்” இயக்கத்தில் “காட்டா மேத்தா”எனும் ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார் த்ரிஷா.
2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதில் க்ளாசிக் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் உள்ள ஜெஸ்சி-யின் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் த்ரிஷா,பல நிலையான அதே சமயம் த்ரிஷாவின் நடிப்பிற்கென அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் அமைந்த்து.தமிழ் ரசிகர்களின் மனதில் ஜெஸ்சி-க்கு என்றுமே நீங்காத இடம் உண்டு.
த்ரிஷாவிற்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளை பிரியம்,தன் 30வது பிறந்தநாள் அன்று உடல் உறுப்பு தானம் செய்து, தன் சமூக அக்கறையை இன்னும் அழுத்தமாகப் பதிந்தார் த்ரிஷா. கூடவே வேர்ல்ட் ஹெல்த் டீமின் அம்பாசிடரா இருக்கும் த்ரிஷா பற்றி நம்ம கட்டிங் கண்ணையா குடுத்த செய்திகளுடன் வாழ்த்தும் சொல்வதில் சென்னை ராயல் சினிமா அப்டேட் குழு மகிழ்ச்சி கொள்கிறது