பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் திடீர் மரணம்

இன்று காலையில் மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனையில் லுகேமியா புற்று நோயால் மரணமடைந்த பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் உடலை வழக்கமாக செய்வது போல வீட்டுக்குத் தூக்கிச் சென்று சடங்குகள் நடத்தி இறுதிக் காரியங்களை செய்ய வேண்டாம் என்று மும்பை போலீஸார் கபூர் குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
மருத்துவமனையில் இருந்து அப்படியே அருகில் இருக்கும் சந்தன்வாடி இடுகாட்டில் தகனம் செய்துவிடலாம் என்று அட்வைஸ் செய்துள்ளனராம்.
ரிஷிகபூரின் மகள் ரித்திமா கணவர், மகளுடன் டெல்லியில் வசிக்கிறார். தந்தை இறந்த செய்தியைக் கேட்டுவிட்டு தற்போது மும்பைக்கு காரில் பயணம் செய்து வருகிறாராம். 1400 கிலோ மீட்டர் தூரம். எப்படியும் 18 மணி நேரமாகும் என்கிறார்கள்.
தனி பிளைட்டில் மும்பை செல்ல.. டெல்லியில் பல முக்கிய இடங்களிலும் கதவைத் தட்டியிருக்கிறது கபூரின் குடும்பம். அனுமதி கிடைக்கவில்லையாம்.. பாவம் அவர்கள்..
இந்நேரம் யாராவது ஒரு அரசியல்வியாதியாக இருந்திருந்தால் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கும். இவர் ஒரு சாதாரண பாலிவுட் நடிகர்தானே என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்களாம்.
தனி விமானத்தில் ஒரு குடும்பம் மட்டும்தான் போகப் போகிறது. அனுமதித்தால்தான் என்ன.. குறைஞ்சா போகப் போகுது..
இந்தக் குழப்பத்தினால் ரிஷியின் இறுதிச் சடங்கு எப்போது என்பது இப்போதுவரையிலும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.
