சினி நிகழ்வுகள்

செய்தித்தாள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் பன்னீர் செல்வம் (எ) ‘பஞ்ச்’ பரத் – மகள் திருமணம்

செய்தித்தாள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் பன்னீர் செல்வம் (எ) ‘பஞ்ச்’ பரத் – ரங்கநாயகி தம்பதியரின் மகள் ப. யுவராணி மங்கைக்கும், ஐஸ்வரியம் பில்டர்ஸ் & டெவலப்பர்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் எஸ். ஆனந்தன் – மகேஷ்வரி தம்பதியரின் மகன் ஆ. புவனேஷுக்கும் சென்னையில் இன்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடைபெற்றது. திரளான திரைப்படத் துறையினர் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அசாதாரண சூழலால் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டிருந்த திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற வேண்டியதாயிற்று. எனவே இயல்புநிலை திரும்பியவுடன் விமரிசையான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக மணமக்களின் பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் திரை இயக்குனர் ‘பஞ்ச்’ பரத் , வருகின்ற தமிழ்த்திரைப பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ‘பாதுகாப்பு அணி’ சார்பாக நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்களது மேலான பார்வைக்காக இத்துடன் திருமண பத்திரிகையை இணைத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *