சினிமா செய்திகள்நடிகர்கள்

சிவகார்த்திகேயனின் ஹீரோ-வுக்கு நேர்ந்த கதி

கோலிவுட்டில் மார்கெட் உள்ள நடிகர் பட்டியலில் இன்னமும் இருப்பவர் பட்டியலில் உள்ளவர் சிவகார்த்திகேயன் .

இவர் நடிப்பில் போன வருசம் ரிலீஸான படம் ‘ஹீரோ’. இதை மித்ரன் டைரக்ட் செஞ்சிருந்தார்.

ஆனா இந்தப் படதோட கதை அம்புட்டும் என்னுடையதாக்கும் அப்படீன்னு போஸ்கோ பிரபு – அப்படீங்கறவர் ஐகோர்ட்டில் வழக்கொன்றை போட்டிருக்கார். அதை விசாரிச்ச சென்னை ஐகோர்ட் 10-03-2020 அன்னிக்கு வழங்கிய இடைக்கால உத்தரவில், “இந்த ஹீரோ படத்தை வேறு மொழிகளில் வெளியிட கூடாது. மற்றும், மொழி மாற்றம் [டப்பிங்], சாட்டிலைட் உரிமைகளையும் யாருக்கும் தரக் கூடாது…” என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தடை யை சட்டை செய்யாம தெலுங்கில் ‘சக்தி’ என்ற பெயரில் ‘ஹீரோ’ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த மார்ச் 20-ம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாக இருந்தது.

ஆனா பாருங்க..

, கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த எக்ஸ்ட்ரா லேங்குவேஜ் ஹீரோ வெளியாகவில்லை.

உடனே இமிடியட் இன்கம் பார்க்கும் நோக்கில் லாஸ்ட் மன்த் -தில் அமேசான் பிரைம் என்ற OTT தளத்தில் ‘ஹீரோ’ தமிழ்ப் படமும், இதன் தெலுங்கு டப்பிங் படமான ‘சக்தி’ திரைப்படமும் ஒளிபரப்பு செஞ்சுப்புட்டாய்ங்க.

உடனே இந்த படத்தோட கதைக்கு உரிமை கொண்டாடி வரும் போஸ்கோ பிரபு இது குறிச்ச ஐகோர்ட் ஜட்ஜ்மெண்டை அமேஸான் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார். அதை பார்த்த அமேஸான் இந்த ஹீரோ தமிழ்ப் படம், சக்தி தெலுங்கு படம் ரெண்டையும் அமேஸான் OTT தளத்தில் இருந்து தூக்கிப்புட்டாய்ங்க.

இப்போ இது குறித்துர் போஸ்கோ-கிட்டே கேட்டப் போது , “ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும் வெளியாவதற்கு நான் தொடுத்த வழக்கினால் சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. இதையடுத்து அமேசான் பிரைமுக்கு இமெயில் மூலம் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் நகலை அனுப்பினேன். இதைப் பார்த்த அவர்கள் இப்போது ஆன்லைனில் இருந்து அந்த 2 படங்களையும் நீக்கிவிட்டார்கள். விரைவில் கோர்ட்டில் இருந்து இத்திரைப்பட கதை தொடர்பாக என் சார்ப்பா நல்ல விதமா இறுதித் தீர்ப்பு நல்லவிதமாக வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…” அப்படீன்னார்