சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் புதிய படத்தின் டைட்டில் இன்று அறிவிப்பு

ஆக்டர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’, ‘இன்று நேற்று நாளை 2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகிட்டு இருக்குது. இந்நிலையில் விஷ்ணு விஷால் ”என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்துச்சு. ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. அதே தினத்தில் நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் அது உங்களது அனுமதி இருந்தால் மட்டுமே. வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிடவிருக்கிறோம். ஆனால் உங்களின் முடிவே இறுதியானது” என்று கருத்துக்கணிப்பு(POLL) வைத்து ரசிகர்களிடம் கேட்டிருந்தார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் எனப் பதிலளிச்ச நெலையில் நாளைக்கு தன் புது மூவி-யின் டீசரை நாளைக்கு ரிலீஸ் பண்றதா அறிவிச்சிருக்கார்