யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு ரத்து
யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வருகிற ஏப்பரல் 5ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.இதற்காக அவர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல்கட்சித் தலைவர்கள், முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். தற்போது ஏப்ரல் 14ந் தேதி வரை ஊரடங்கு அமுலில் இருப்பதால் திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு இடம் அளித்திருந்த ஓட்டல் நிர்வாகமும் அதனை ரத்து செய்து யோகிபாபுவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுது. இதனால் வரவேற்பு தள்ளிப்போகும் என தெரிகிறது