லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கிறார்.

ஏற்கெனவே விஜய் குரலில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து முழு இசை வெளியீட்டை மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

இதற்கு முன்னர் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய்யின் முந்தைய படங்களான ‘சர்க்கார், பிகில்’ உட்பட பல படங்களின் இசை வெளியீடு நிகழ்விலும் விஜய் பேசிய பேச்சு பரபரப்பாக அமைந்தது. அதையடுத்து சர்ச்சையும் எழுந்தது.

இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் கதையே சமூகப் பிரச்சினையை மையப்படுத்திய ஒரு சர்ச்சைக்குரிய கதைதான் என்று சொல்லப்படுகிறது. இதனால், ரிலீஸ் நேரத்தில் வேறு எந்த பிரச்சினையும் வராமல் இருக்கவே இசை வெளியீட்டை ஓப்பனாக நடத்தத் தயங்குகிறார்களாம்.

அதனால், இத்தடவை அப்படிப்பட்டசர்ச்சைகளைத் தவிர்க்க படக்குழுவினர் மட்டும் பங்கு பெறும் விதத்தில் சன் டிவி-யில் லைவ-வாக இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இந்த விழாவிற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாரையும் அழைக்கும் எண்ணமும் இல்லையாம்.

வருமான வரி சோதனை, விசாரணை மூலம் விஜய்க்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் இப்படி வெளியில் தெரியாமல், யாரையும் விடாமல் இசை வெளியீட்டை படக்குழுவினர் நடத்த திட்டமிட்டுள்ளதாகத்தெரிவிக்கிறாங்க

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/vijay_official_89297304_479749729577694_2029803395519428784_n-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/vijay_official_89297304_479749729577694_2029803395519428784_n-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரைப்படங்கள்நடிகர்கள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கிறார். ஏற்கெனவே விஜய் குரலில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து முழு இசை வெளியீட்டை மார்ச் மாதம் 15 ஆம் தேதி...