இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல படமெங்கும் அவரது வசனங்கள் தெறித்தனம்..

தேசாந்திரியான ஜீவா தீவிர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நடாஷாவை வீட்டாரின் சம்மதமின்றி காதல் திருமணம் முடிக்கிறார். அவர்கள் இல்லறம் சீராகப் பயணிக்கும் போது ஒரு மதக்கலவரத்தில் ஜீவா நடாஷா பிரிகிறார்கள். அதன்பின் எப்படி இணைகிறார்கள் என்பதை அரசியல் கலந்து சொல்லி இருக்கிறார் ராஜு முருகன்

ஜீவா கொரில்லா சீறு என கமர்சியல் ரூட் பிடித்து சென்று கொண்டிருந்தாலும் ஜிப்ஸி மாதிரியான படங்கள் தான் அவரது அடையாளம். ஒவ்வொரு பிரேமிலும் தேசாந்திரியாக வாழ்ந்திருக்கிறார். நடாஷா அழகைப் போலவே நடிப்பிலும் வசீகரிக்கிறார். சோனுகுமார் என்ற பாத்திரத்தில் வரும் வில்லன் எலும்பை ஜில்லிட வைக்கும் அளவில் மிரட்டி இருக்கிறார்.

படத்தின் ஆதர்சமான மேட்டர் ஒளிப்பதிவு தான். கலவரத்தின் போது காட்டப்படும் ஷாட்கள் எல்லாம் அவ்வளவு நேர்த்தி. பின்னணி இசை பாடல்களில் இன்னும் சந்தோஷ் நாராயணன் சந்தோஷத்தை கொடுத்திருக்கலாம்.

படத்தின் நீளம் சற்று பிரச்சனையாக இருந்தாலும் படம் பேச வரும் விசயம் ரொம்ப ஆழமானது. அன்பாயுதம் தான் கலவரத்திற்கு எதிரான பேராயுதம் என்பதை உணர்த்திச் செல்லும் ஜிப்ஸி இந்தியச் சமூகம் வரவேற்க வேண்டிய சினிமா!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG-20200305-WA0007.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/IMG-20200305-WA0007-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல படமெங்கும் அவரது வசனங்கள் தெறித்தனம்.. தேசாந்திரியான ஜீவா தீவிர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நடாஷாவை வீட்டாரின் சம்மதமின்றி காதல் திருமணம் முடிக்கிறார். அவர்கள் இல்லறம் சீராகப் பயணிக்கும்...