சமூக அக்கறையை கொஞ்சம் கமர்சியம் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்தால்..அதுதான் வெல்வெட் நகரம்.

மலைவாழ் மக்களின் இடத்தை கார்ப்பரேட் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகையான கஸ்தூரி. அதனாலே அவர் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலெட்சுமி அதற்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பது தான் படத்தின் கதை.

கஸ்தூரி மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் வருகிறார். வரலெட்சுமி தான் படத்தின் ஒன் ஆப் த ஹீரோ. பரபரப்பு காட்சிகளிலும் சரி பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சரி நன்றாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், அர்ஜாய்,சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர் உள்பட படத்தில் வரும் அனைவரும் நடிப்பில் பெரிதாக சோடைபோகவில்லை.

சிறிய பட்ஜெட் படம் என்பதைத் தெரியாதளவில் பரபர திரைக்கதை உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர் மனோஜ் குமார் நடராஜன். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சற்று வித்தியாச கோணத்தோடு அணுகப் பட்டிருப்பது புதிதாக இருக்கிறது. இடைவெளி இல்லா திரைக்கதையாக இருந்தாலும் படம் இடைவேளைக்குப் பிறகு தான் சூடு பிடிக்கிறது. படத்தின் பரபரப்பிற்கு சரண் ராகவனின் பின்னணி இசையும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் எடிட்டிங்கும் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. பகத்குமார் இரவுக்காட்சிகளை மிக அழகாக படம் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் ஒரு வீட்டிற்குள்ளே தான் நடக்கிறது. அந்த வீட்டை சிறப்பாக வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் கங்கப்பன்.

படத்தின் பேசுபொருள் ரொம்ப முக்கியமானது என்பதால் படத்தின் கலையாக்கத்தில் இருக்கும் சிறு பிழைகள் பெரிதாக தெரியவில்லை

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/Velvet-Nagaram-Movie-Poster.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/03/Velvet-Nagaram-Movie-Poster-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்சமூக அக்கறையை கொஞ்சம் கமர்சியம் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்தால்..அதுதான் வெல்வெட் நகரம். மலைவாழ் மக்களின் இடத்தை கார்ப்பரேட் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகையான கஸ்தூரி. அதனாலே அவர் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலெட்சுமி அதற்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பது தான் படத்தின் கதை. கஸ்தூரி மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் வருகிறார். வரலெட்சுமி தான் படத்தின் ஒன் ஆப் த ஹீரோ. பரபரப்பு காட்சிகளிலும்...