Latest:
திரை விமர்சனம்

-அர்ஜுன் தாசின் மாறுபட்ட நடிப்பில் ,’பாம்’ – எப்படி இருக்கிறது?,

கைதி படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் அது முதல் தமிழ் திரையலகின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். தொடர்ந்து அநீதி உள்ளிட்ட படங்களில் நாயகன் ஆனாலும், கதை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப தன்னை நடிப்பில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இப்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பாம் படத்தில் கிராமத்து நாயகனாக முற்றிலும் புதுவித நடிப்பை தந்து இருக்கிறார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வேற்றுமையால் இரண்டாக பிரிந்த ஊரை ஒன்றாக்க விரும்பும் நண்பனுக்கு தோள் கொடுக்கிறார். எதிர்பாராத விதமாய் நண்பன் இறந்து போக, நண்பனின் பிணத்தை வைத்தே ஊரை ஒன்று சேர்க்கிறார். அது எப்படி என்பது சுவாரசிய கதைக்களம்.

கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். கிராமத்து கதைக் கேற்ப மண் மணம் சார்ந்த அந்த பாத்திரத்தில் தனது மாறுபட்ட நடிப்பை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார். நண்பன் கதிரின் மரணத்திற்குப் பிறகு பிற்பகுதி கதை முழுக்க அர்ஜுன் தாசை சுற்றியே நகர்கிறது. அவரும் அதை உணர்ந்து அந்த கேரக்டருக்குள் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கிறார் அந்த மணிமுத்து பாத்திரம் மூலம் புதுவித மேனரிசத்துடன் வெளிப்பட்டிருக்கிறார் ஊரை திருத்த ஆவேசமாய் அவர் சாமியாடும் இடத்தில் திரையரங்கு அதிர்கிறது, ரசிகர்களின் ஆரவார கரகோஷத்தில்.

இந்த படத்தில் கதைக் கேற்ப ஊர்க்காரர்கள் சிலரிடம் அறை கூட வாங்குகிறார். திருப்பி அடித்தால் ஊர் மேலும் பிளவு படும் என்று அமைதி காக்கிறார். ஊரின் ஒற்றுமையைக்
கெடுக்கத் திட்டமிடும் அரசியல்வாதிகளின் அடியாட்கள் தன்னை தாக்க வரும் போது மட்டும் அடித்து துவைக்கிறார். இந்த வகையில் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் முழுக்க முழுக்க நாயகனாக மட்டுமே வெளிப்பட்டு இருக்கிறார்.