திரை விமர்சனம்

அகத்தியா – திரை விமர்சனம்

சித்த மருத்துவத்தின் சிறப்பை ஒரு திகில் கதை வழியே நம்முள் கடத்திருக்கிறார்கள். கதை சொன்ன விதத்தில் படம் ரசிகனுக்கு புதிய அனுபவம் ஆகி விடுகிறது. அதாவது இனிய அனுபவம்.

சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரூ.6 லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட, செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப எடுக்க அந்த செட்டை திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். கூடவே பிரச்சனையும் வந்து சேர்கிறது.

அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, செட்டை இழுத்து மூடுகிறது அரசாங்கம்.ஏற்கனவே குணப்படுத்த முடியாத நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை நினைத்து கவலையாக இருக்கும் ஜீவா அதிர்ச்சியாகிறார்.

இந்த சமயத்தில், அரண்மனை செட்டிற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பது தெரிய வர, அங்கு சென்று பார்க்கையில் அங்கே அதிர்ச்சிகரமான பல அமானுஷ்யங்களின் தாறுமாறு விளையாட்டு மேலும் அதிர்ச்சி தருகிறது. உண்மையில் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுஷ்ய சக்தி தன்னிடம் ஏதோ கூற வருவதை உணர்கிறார் ஜீவா. அங்கே கிடைத்த பழைய படச் சுருளும் b அதை உறுதி செய்கிறது. இப்போது 1940-க்கு கதை நகர்கிறது. சித்த மருத்துவத்தில் தேர்ந்த அர்ஜூனுக்கும் இந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு காட்சியாக வருகிறது. சித்த மருத்துவர் சொல்லவரும் செய்தி இப்போது ஜீவா மூலம் வெளிப்பட என்ன காரணம் என்பது திகில் கலவையில் செய்யப்பட்ட திகு திகு திரைக்கதை.

நிகழ் காலத்தில் ஜீவாவும் கடந்த காலத்தில் அர்ஜுனும் நாயகனாக வரு கிறார்கள். தாயின் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க துடிக்கும் ஜீவாவுக்கு சித்த மருத்துவம் அந்த மருந்தை தந்ததா? ஜீவாவின் தாய் காப்பாற்றப்பட்டாரா என்பது நெஞ்சுக்கு நெருக்கமான கிளைமாக்ஸ்.

தாய்க்காக உருகும் ஜீவா, திகில் அரண்மனைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு ஆவிக்கெல்லாம் பயப்படாமல் அடுத்தடுத்து மேற்கும் முயற்சிகள் திகிலுக்கு மட்டுமல்ல அவரது நடிப்புக்கும் உத்தரவாதம்.பிளாஷ் பேக்கில் முழுக்க அர்ஜுன் ஆக்கிரமிக்கிறார் இவருக்கும் வெள்ளைக்கார அதிகாரியின் தங்கைக்குமான காதல் காட்சிகள் ரசனை மிக்கவை. நாயகி ராசி கண்ணாவிற்கு ஜீவாவு டன் வந்து போகும் பாத்திரம். காதலைத் தாண்டி நட்பு முன்னிற் கும் இடங்கள் அத்தனையும் கவிதை.

வில்லனாக நடித்த எட்வர்ட், அப்பாவாக நடித்த சார்லி, அம்மாவாக நடித்த ரோகிணி தங்கள் பாத்திரங்களை நடிப்பால் பளபளப்பாக்குகிறார்கள்.ஜீவாவின் நண்பராக வரும் சாரா சிரிக்க வைக்கிறார். சின்ன கேரக்டரிலும் வெள்ளைக்கார அதிகாரியின் எடுபிடியாக வந்து ரசிக்க வைக்கிறார் ராதா ரவி. செந்தில், யோகி பாபு, பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, வி டி வி கணேஷ் தங்கள் பாத்திரங்களை நடிப்பால் தாங்குகிறார்கள்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அம்மா பாட்டு நெஞ்சுக்குள் பூங்காற்று. அப்பா இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே பாட்டு’ ரீமிக்ஸ்சிலும் அமர்க்களம் செய்திருக்கிறார் .

பா. விஜய் இயக்கியிருக்கிறார். சித்த மருத்துவ சிறப்பை சொல்வ சொல்வதற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்தில் ஒரு இனிய காதல், நட்பு துரோகம், தாய்ப் பாசம் ஆகியவற்றையும் இணைத்து சொன்ன விதத்தில் தேர்ந்த இயக்குனராகவும் தடம் பதிக்கிறார் பா. விஜய். கடைசி 10 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் வியப்பின் உச்சம்

அகத்தியா, ஜெயிக்கப் பிறந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *