வணங்கான் – திரை விமர்சனம்
பேசும் திறனும் கேட்கும் திறனுமற்ற கோட்டிக்கு தனது தங்கை தான் உலகம். கன்னியாகுமரியில் கிடைத்த வேலையை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் கோட்டி தன் பார்வையில் முறைகேடாக எது நடந்தாலும் அதை தட்டிக் கேட்பவன். கை கால்களை உடைக்கவும் தயங்க மாட்டான். அவனது இந்த முரட்டுத்தனம் மாற நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் நல்லது என்று முடிவு செய்யும் அவனது நலம் விரும்பிகள் மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுக்கிறார்கள். அங்கே நடக்கும் ஒரு விபரீத சம்பவம் அவன் காதுக்கு வரும்போது அவன் எடுக்கும் விஸ்வரூபமே மீதிக்கதை.
கோட்டியாக அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் வருத்தி தன்னை நிறுத்தி இருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அந்தக் கோட்டி கேரக்டரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இருக்கும் அண்ணனிடம் என்ன இப்படி செஞ்ச அந்த கண்ணீருடன் கேட்கும் தங்கையிடம் அதற்கான காரணம் சொல்ல முடியாமல் தவிக்கும் அந்த முகபாவனை, நடிப்பில் அத்தனை அழகு. காணாமல் போய்விட்ட தங்கையை தேடி பரிதவிக்கும் இடங்களிலும் இடங்களிலும் பாலாவின் கணவன் நாயகனை நடிப்பில் அப்படியே பிரதிபலிக்கிறார். கிளைமாக்ஸ் கசில் அந்த நடிப்பு துடிப்பும் விருது பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை.
நடிப்பில் அடுத்த இடம் தங்கையாக வரும் ரிதாவுக்கு. அண்ணனின் ஒவ்வொரு பொது நலமும் பிரச்சனையில் முடியும் போதும் அதற்காக உள்ளுக்குள் ஒடைந்து போகும் அந்த தங்கையை தன் நடிப்பில் அழகாக வார்த்து இருக்கிறார் ரிதா.
கன்னியாகுமரியில் சுற்றுலா கைடாக, அருண் விஜய் மீது காதலாக என்று பார்த்த மாத்திரத்தில் அந்த கேரக்டரில் ரோஷினி பிரகாஷ் பிரகாசிக்கிறார். கௌரவ தோற்றத்தில் வந்தாலும் போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, நீதிபதி மிஷ்கின் பாத்திரங்கள் படத்தின் தரத்தை உயர்த்திப் உயர்த்திப் பிடிக்கின்றன.
குருதேவின் கேமரா கன்னியாகுமரியின் அழகை திகட்ட திகட்ட தந்திருக்கிறது.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் இனிமை. குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் உருக்கி விடுகிறது. சாம் சி. எஸ். சின் பின்னணி இசை கதைக்குள் கதை
பேசுகிறது.
விளிம்பு நிலை மனிதர்களின் முகமாக நின்று முகமுகமாய் அவர்களின் இல்லாமை, இயலாமையை, பெருங்கோபத்தை காட்சி வாரியாக பேசும் டைரக்டர் பாலா இம்முறையும் அப்படியொரு கதை வழியே நம்முடன் பேசி இருக்கிறார். அன்புக்கு மட்டுமே தலை வணங்கும் இந்த வணங்கான் வழியே அவர் தந்திருப்பது வலிய காவியம்.
வணங்கான் – வணங்காமுடி.