முதல் போட்டியாளர் வெளியேற்றம், பிக்பாஸ் சீசன் 8ல் விஜய் சேதுபதி தந்த அதிர்ச்சி அறிவிப்பு!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.
இன்றைய நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது.
புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.