திரை விமர்சனம்

அந்தகன் விமர்சனம் 4.5/5… ராயல்-கன்

கதை…

பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வையற்றவராக நடித்து அதன் மூலம் மக்களிடையே அனுதாபம் பெற்று பணம் சம்பாதித்து லண்டன் சென்று மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என நினைக்கிறார்.

இவர் நிஜமாலுமே கண் தெரியாதவர் தானா என்ற சந்தேகம் பிரசாந்த் வீட்டில் அருகே வசிக்கும் பூவையார் & பிரசாந்த் காதலிக்கும் பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த திறமையான கலைஞர் நிஜமாகவே கண் பார்வையற்றவர் என நினைத்து நவரச நாயகன் நடிகர் கார்த்திக் (கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.) நாளை எனது திருமண நாள்.. எனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நீங்கள் வந்து எனது ஹிட்டான பாடல்களை பியானோ மூலம் வாசித்து காட்ட வேண்டும் என அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறார்.

அதன்படி அடுத்த நாள் மதியம் கார்த்திக் வீட்டிற்கு செல்லும்போது அவரது மனைவி சிம்ரன் மட்டுமே இருக்கவே அங்கு பியானோ வாசிக்க ஆரம்பிக்க அப்போது அந்த வீட்டில் கார்த்தி இறந்து கிடப்பதை அறிகிறார் பிரஷாந்த்.

அப்போது அதைப் பார்க்காதவாறு கண் பார்வையற்ற நபராகவே தொடர்கிறார்.. உள்ளே ஒரு அறையில் சமுத்திரக்கனி இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.

எனவே காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க புறப்படுகிறார்.. பின்னர் தான் தெரிகிறது வீட்டில் ஒளிந்திருந்த சமுத்திரக்கனி ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? தான் பார்த்த கொலையை சொன்னாரா..? பார்வையற்றார் ஆகவே தொடர்ந்தாரா என்பதுதான் படத்தின் அடுத்த அடுத்த திருப்புமுனை காட்சிகள்..

நடிகர்கள்…

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, வனிதா, யோகிபாபு, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜே எஸ் கே கோபி, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் மற்றும் பலர்..

டாடி டைரக்ஷன் என்பதால் அதிக கவனம் எடுத்துக் கொண்டாரா அல்லது இது ரீ என்ட்ரி என்பதற்காக மெனக்கடல எடுத்துக் கொண்டாரா பிரசாந்த் என தெரியவில்லை.. ஆனால் அவருக்கு இது ஒரு ரீ என்ட்ரி படமாக வந்திருக்கிறது.

பிரசாந்த் – சிம்ரன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர்.

கண்பார்வையற்ற நபராகவும் சில காட்சிகளில் பார்வை உள்ளவராகவும் என அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.

நான் சும்மா இருப்பேனா நானும் ஸ்கோர் செய்வேன் என சிம்ரனும் வில்லி வேடத்தில் விளாசி இருக்கிறார்.. சமுத்திரக்கனியும் இவர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்.. கொலையை பிரசாந்த் பார்த்து விட்டாரா என்ற கோணத்தில் அவர் அணுகும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் பிரசாந்தின் கேர்ள் ஃபிரண்ட் பிரியா ஆனந்த்… அரைகுறை ஆடையில் வந்து நம்மை கவர்ந்திருக்கிறார்..

நவரச நாயகன் கார்த்திக் கொஞ்ச நேரமே வந்தாலும் கார்த்திக்காகவே வந்து அசத்தியிருக்கிறார்..

பக்கத்து கடை பையன் பூவையார், ஆட்டோக்காரர் யோகி பாபு, குறி சொல்லும் போலி லாட்டரி விற்பனையாளர் ஊர்வசி, கிட்னி திருடும் டாக்டர் கே எஸ் ரவிக்குமார், மனைவி வனிதா விஜயகுமார் மற்றும் மனோபாலா உள்ளிட்ட கேரக்டர்களில் அதிரடி காட்டி இருக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் நாராயண இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேற லெவல் ரகம்.. ரவி யாதவியின் ஒளிப்பதிவில் லண்டன் அழகும் பாண்டிச்சேரி அழகும் வசியம் செய்கிறது.. முக்கியமாக கலை இயக்குனர் கைவண்ணத்தில் உருவான ப்ரியா ஆனந்த் என ரெஸ்டாரன்ட் ரசிக்க வைக்கிறது.

நிஜத்தில் தன் மகன் ஒரு பியானோ கலைஞர் என்பதால் அவருக்கான கதையை எடுத்து அதில் மகனை அதிகமாக வாசிக்க விட்டு ஸ்கோர் செய்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன்.

படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ப நடிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் திறம்பட வேலை வாங்கி ஒரு இயக்குனராகவும் ஜொலித்திருக்கிறார் தியாகராஜன்.

ஆக இந்த அந்தகன்.. தியாகராஜன் & பிரசாந்த் குடும்பத்திற்கு அமோக லாபம் தரும் அந்தகனாக ஜொலிப்பார் என உறுதியாக சொல்லலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *